English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stateliness
n. வீறமைதி, பெருமிதத்தன்மை, மதிப்புயர்வு, விழுமிய தோற்றம், வீறார்ந்த சந்தமுடைமை, நடைவீறு.
Statelity
adv. பகட்டாரவாரமாக.
Stately
a. வீறார்ந்த, பெருவிதமான, மதிப்பார்ந்த, ஒய்யாரமான, விழுமிய தோற்றமுடைய, கம்பீரமான, சந்தவீறமைதி வாய்ந்த, வீறுநடை நான்ற, பகட்டாரவாரமிக்க, (வினையடை.) வீறமைதியுடன், ஒய்யாரமாக, பகட்டாரவாரமாக.
Statement
n. கூறுதல், பகர்தல், கட்டுரைத்தல், அறிவிப்பு, வாக்குமூலம், கூற்று, செய்தி, கூறப்பட்ட ஒன்று, விவர அறிவிப்புப் பெட்டி, விவரம், விவர வாசகம்.
Statemonger
n. போலி அரசியல்வாதி.
Stater
n. பண்டைக் கிரேக்க நாணயம்.
State-room
n. அரசுத்துறைத் தனியறை, கப்பல் தனிநிலைத்துயிற்கூடம்.
Statesman
n. அரசயில் மேதகை, அரசயில் மெய்ஞ்ஞானி, ஆட்சி வல்லுநர், இராசதந்திரி, பொதுநல மேதகை, பெருஞ்செயற் பண்பாளர், வட இங்கிலாந்தின் சிறுதன்னுழைப்பு நிலக்கிழார்.
Statesmanlike
a. அரசயில் மேதகைமை சான்ற, பெருஞ்செயற் பண்பு வாய்ந்த, சான்றாண்மைமிக்க.
Statesmanly
a. அரசயில் மேதகைக்குரிய, பெருஞ்செயற்பண்புசான்ற, பெருந்தகை வீறு.
Statesmanship
n. அரசியல் மேதகைப் பண்பு, அரசயில் நயத்திறம், பெருந்தகை வீறு.
Static
a. நிலையான, நிலையமைதிப் பண்புடைய, இயங்காத, அசைவற்ற, சமநிலை அமைதிகொண்ட.
Statical
a. நிலையமைவியல் சார்ந்த, நிலையமைதிப்பண்பு சார்ந்த, இயங்காத, நிலையமைவான, சமநிலையமைதியுடைய.
Statically
adv. நிலையமைதி முறையில், இயங்கா அமைதி முறையில், நிலையமைவியலின்படி.
Statics
n. நிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.
Station
n. நிற்றல், நிற்குநிலை, வழக்கமாக நிற்கும் இடம், இருப்பூர்தி நிற்புநிலை, இருப்பூர்தி நிலையம், உந்தூர்தி நிற்புநிலை, காவல்துறை நிலையம், கிளைநிலைக் கிடங்கு, அலுவலகக்கிளை, தங்கிடம், தங்கல்மனை, இடைத்தங்கல் இடம், இடைத்தங்கல் மனை, வரையிடம், குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், பணியிடம், பணி இலக்கிடம், பணித்துறையிடம், காவற் பணியிடம், இடநிலை, நிலையிடம், இட அமைவு, தானம், அமைவிடம், வாழ்க்கைநிலை, நிலைத்தரம், சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம், பணித்துறை, வாழ்க்கைத்துறை, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவௌத, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவௌத மனை, திருச்சபை உண்ணா நோன்பு, ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில், திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று, நிலைத்தளம், படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு, (எல்.) குறியிடம், அளவைமூலக் குறிப்பிடம், (தாவ.) இயல் வளர்நிலையிடம், (வில.) இயல் வாழ்வுநிலையிடம், (பெ.) நிலையத்திற்குரிய, தங்கிடத்திற்குரிய, பணிமனைக்குரிய, (வினை.) இடம் அமர்த்திக்கொடு, இடத்தில் அமர்த்து, குறியிடத்தில் நிறுத்து, இடத்தில் நிறுத்திவை, தங்கவை இட்டுவை, அமர்த்திவை.
Stationaries
n. pl. நிலையியற் படைவீரர்கள், நிலையியற் படை.
Stationariness
n. இடம் பெயரா நிலை, இயங்கா நிலை.
Stationary
n. இடம்பெயராதவர், (பெ.) நிலையிருப்பான, இடம் பெயராத, இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத, இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத, நிலையமர்விற்குரிய, தூக்கிச் செல்வதற்குரியதல்லாத, அளவுமாறாத,தொகைமாற்றமில்லாத, கூடுதல் குறைதலற்ற, பண்பு மாற்றமில்லாத, கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற, திணைகாலஞ் சார்ந்த, நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Station-bill
n. (கப்.) ஆளமர்வுப்பட்டி.