English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stavesacre
n. நச்சு விதை வகை, மூட்டைக்கொல்லி நச்சு விதைவகை.
Stay
-1 n. தங்கல், தங்கியிருப்பு, குடியிருப்பு, தங்கியிருப்புக் காலம், குடியிருப்புக்காலம், தடுப்பு, தடை, தடுத்து வைப்பு, தற்காலிக நிறுத்தம், இடைநிறுத்தம், நிறுத்தம், தடுப்படக்கம், பொறுதியாற்றல், சகிப்புத்திறம், ஊன்றுகோல், ஆதாரம், (சட்.) நடைமுறைத் தடை, (சட்.)
Stay
-2 n. பாய்மரம் தாங்குங் கயிறு, பாய்மரக் குறுக்கு மரச்சட்டம் தாங்கும் கயிறு, (வினை.) பாய்மரக் கயிறுகளால் தாங்கு, கப்பலை வேறு பாய்மரக் கயிறுகளால் பிணை.
Stay-at-home
n. வீட்டுவாசல் தாண்டாதவர், (பெ.) வீட்டிலேயே அடைபட்டிருக்கிற.
Stay-bar
n. கட்டிட உதைகால், இயந்திர அண்டைக்கட்டு.
Stay-down strike
n. உள்ளிருப்பு வேலைநிறுத்தம்.
Stayed
a. பெண்டிர் வகையில் இறுக்கு வார்க்கக்சிட்ட.
Stayer
n. தங்குபவர், நிறுத்துபவர், தடுப்பவர், தங்குவது, நிறுத்துவது, தடுப்பது, அண்டை கொடுப்பவர், அண்டை கொடுப்பது, உதைகால், ஆட்டப்பந்தயம் முதலியவற்றில் நீடித்து ஆடியிருப்பவர், ஆட்டப்பந்தயம் முதலியவற்றில் நீடித்திருப்பது, நீடித்திருக்குந் திறமுடையவர், நீடித்திருக்குந் திறமுடையது.
Stayin strike
n. உள்ளிருப்பு வேலைநிறுத்தம்.
Staying
n. தடுப்பு, நீடிப்பு, நீடித்திருப்பு, (பெ.) நீடிக்கிற, நீடித்திருக்கிற, தடுக்கிற.
Staying-power
n. சோர்வுறா ஆற்றல்.
Stay-lace
n. பெண்டிர் இறுக்க வார்க்கச் சிழை.
Stayless
a. தடுக்கப்பட முடியாத, இடையே நிற்காத, இடைநிறுத்தமற்ற, ஆதாரமற்ற, நிலையற்ற, பெண்டிர் வகையில் இறுக்க வார்க்கச்சற்ற.
Stay-maker
n. பெண்டிர் இறுக்க வார்க்கச்சுச் செய்பவர்.
Stays
n. pl. பெண்டிர் இறுக்க வார்க்கச்சு.
Staysail
n. கயிறு தாங்கும் பாய்மரம்.
Steadfast
a. நிலையுறுதியுடைய, மாறா நிலையான, ஊன்றிய, உலைவிலாத, தடுமாற்றமற்ற.
Steadfastly
adv. நிலையாய், உறுதியாய்.
Steadily
adv. ஒருநிலைப்பட, சமநிலையாய், நடுக்கமில்லாமல், நீடுறுதியாய்.