English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Steadiness
n. தளரா உறுதி, நிலைமாறாத் தன்மை.
Steading
n. பண்ணையகம், கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு.
Steady
n. கையாதாரம், கைப்பிடி ஆதாரம், கையணை ஆதாரம், கருவி ஆதாரம், வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை, பணி ஆதாரப்பட்டடை, குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி, சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள், மாறாநிலைக் காதலர், மாறாநிலைத் தோழமையாளர், (பெ.) உறுதியான, ஊன்றிய, வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய, ஆடாத, அசையாத, நடுக்கமற்ற, ஊசலாட்டமற்ற, தள்ளாடாத, தடுமாற்றமற்ற, கொந்தளிப்பற்ற, நிலையான, நிலையுறுதியான, நிலவரப்போக்குடைய, மாறுபாடற்ற, ஒரே வேகமுடைய, ஒரே வகை மாறுதலையுடைய, ஒரே திசைப்பட்ட, ஒரே சீரான, ஒருநிலை ஒழுங்குபட்ட, ஒருமட்டளவான, மாறாச் செந்நிலையுடைய, படுவிரைவற்ற, வழுவாத, அரைகுறையாய் நின்றுவிடாத, மனநிலையுறுதியுடைய, குடிவெறியற்ற, நடை நேர்மையுடைய, வேலைஒழுங்குடைய, (பெ.) உறுதியாக்கு, ஒருநிலைப்படுத்து, ஒரு சீராக்கு, ஒழுங்குபடுத்து, சமநிலைப்படுத்து, சரிநிலைப்படுத்து, நேராக்கு, உறுதியாகு, ஒருநிலைப்படு, ஒழுங்குபடு, சமநிலைப்படு, நேராகு, ஒருசீராகு.
Steady-going, adj.
நிலைத்த செயலுடைய, நிலைத்த பழக்கமுடைய.
Steafastness
n. உறுதியுடைமை, நெகிழ்வின்மை.
Steak
n. இறைச்சிக்கண்டம், மீன்துண்டம்.
Steal
v. திருடு, மறைவாக எடு, வஞ்சகமாகக் கவர், எதிர்பாராது சென்றெடுத்துக்கொள், வலிந்து சென்று பெறு, சூழ்ச்சிகளால் கைவரப்பெறு, பதுங்கிச் செல், ஔதந்துசெல்.
Stealth
n. களவு, மறைவு, இரகசியம், கரவு, மறைவான நடவடிக்கை, கரவான செய்தி.
Stealthily
adv. கரவாய், மறைவாய்.
Stealthiness
n. கரவுடைமை, களவு.
Stealthy
a. கரவான, மறைவான, வஞ்சகமான, மறைந்து பதுங்கிச் செல்கிற.
Steam
n. வௌளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வௌதயிடு, நீராவித் திவலையை வௌதவிடு, ஆவிவௌதயிடு, திவலை ஆவி வௌதயிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு.
Steamboat
n. நீராவிப்படகு.
Steamboiler
n. இயந்திர நீராவிக் கொதிகலம்.
Steam-box
n. இயந்திர நீராவிக் கொள்கலம், கொதிகலத்திலிருந்து இயக்குருளைக்கு நீராவி செல்லும் இடையிலுள்ள கொள்கலம்.
Steam-coal
n. நீராவிக் கொதிகல உயர்தர நிலக்கரி.
Steam-colour
n. நீராவிமூலம் கெடாநிலைக் கெட்டிமைப் படுத்தப்பட்ட வண்ணம்.
Steam-cylinder
n. நீராவிப்பொறியின் இயக்குருளை.
Steam-driven
a. நீராவியால் இயக்கப்படுகிற.