English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stuipdity
n. மதிகேடு, அறவு மழுக்கம்.
Stultify
v. வீணாக்கு, பயனற்றதாக்கு, முட்டாளாக்கிக் கொள், முன்செயலைப் பொருளற்றதாக்கு, நகைப்பிற்கிடமாக்கு, கேலிக்குரியதாக்கு, விளைவற்றதாக்கு, முன்பின்முரணான செயலால் விளைவுகெடு.
Stum
n. புளிக்காத திராட்சை மது, புது மது, (வினை.) புளிக்காதிருக்கச் செய், நுண்மக்காப்புப் பொருளின் உதவியால் மிடாவில் சாராயம் மேலும் புளிக்காதவாறு செய்.
Stumble
n. தடுமாற்றம், தடுக்கி வீழ்வு, (வினை.) தடுமாறு, இடறு, தடுக்கி விழு, தடுக்கூறு, அறியாப் பெருந்தவறு செய், தற்செயலாக வந்தெய்தப் பெறு, தயக்கங்காட்டு, சிறுநுட்பக் காரணங்களால் மயக்க தயக்கங் கொள், தயக்கக் காரணமாயிரு, மயக்க தயக்கந் தூண்டு.
Stumbling-blockl
n. முட்டுக்கட்டை, தடை.
Stumer
n. (இழி.) விலைமதிப்பற்ற காசுமுறி, கள்ள நாணயம், போலித் தாள்நாணயம்.
Stump
n. அடிக்கட்டை, மர அடித்தார், பயனற்ற குற்றி, உடைந்த பல், துண்டித்த உறுப்படி, எழுதுகோலின் கடையெச்சத்தேய்வு, துடைப்பானின் கடைக்குறை, பேச்சாளர் பயன்படுத்தும் கட்டை மர மேடை, மரப்பந்தாட்ட நிலைக்கழிகள் மூன்றனுள் ஒன்று, ஓவியர் தாள் சுருணைத் துடைப்பான், (வினை.) தட்டுத்தடவென நட, புதிர்போடு, மலைக்க வை, மரப்பந்தாட்ட வகையில் பந்துக்குறியைக் குலைவுறச் செய்து தன்னிடம் விட்டுப்போன ஆட்டக்காரரை அகற்ற, அரசியல் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்து, அரசயில் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்திக்கொண்டு தம் தேர்தல் வட்டாரஞ் சுற்றிச் செல், ஓவியர் வரைவில் தாள்சுருணையைத் துடைப்பானாக அழிக்கப்பயன்படுத்து.
Stumpy
a. கட்டை குட்டையான.
Stun
n. அதிர்ச்சி, (வினை.) அதிர்ச்சியூட்டு, திகைப்பூட்டு, பொறிகலங்கவை, காதுவகையில் செவிடுபட வை, போதங் கெடு, உணர்விழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், செயலடங்குவி, செயல் விஞ்சி மேற்செல்.
Stundism
n. விவிலியத்தின் ருசிய மொழிபெயர்ப்பினைச் சான்றாகக் கொள்ளும் புதுமைக் கிறித்தவ நெறி.
Stundist
n. ருசிய நாட்டுப் புதுமைக் கிறித்தவ நெறியாளர்.
Stung
v. 'ஸ்டிங்' என்பதன் இறந்த கால முடிவெச்சம்.
Stunk
v. 'ஸ்டிங்க்' என்பதன் இறந்த கால வடிவங்களுள் ஒன்று, 'ஸ்டிங்க்' என்பதன் முடிவெச்சம்.
Stunner
n. அதிர்வூட்டுபவர், (இழி.) முதல்தரமானவர், (இழி.) முதல்தரமான செய்தி.
Stunning
a. அதிர்ச்சியூட்டுகிற, பொறி கலங்கவைக்கிற, திகைப்பூட்டுகிற, செவிடுபட வைக்கிற, உணர்விழக்கச் செய்கிற, ஆற்றலிழக்கச் செய்கிற, செயலடங்குவிக்கிற, செயல் விஞ்சி மேற்செல்கிற, (இழி.) மிகச் சிறந்த, முதல் தரமான, மிக வரவேற்கத்தக்க, கழிமகிழ்வூட்டத்தக்க, முற்றுறழ்வான.
Stunt
-1 n. பகட்டுவித்தை, விளம்பரத் தந்திரம், உணர்ச்சிகிளறுஞ் செய்தி, புகழ்நோக்க முனைப்பு செயல், பொதுக் கவர்ச்சிச் செய்தி, (வினை.) பகட்டுவித்தை காட்டு, புகழ்நோக்க முனைப்புச் செயல் செய், விளம்பரத் தந்திரங் கையாளு.
Stunt
-2 v. குட்டையாக்கு, வளர்ச்சி குறை.
Stunted
a. வளர்ச்சி தடைப்பட்ட, குறுக்கப்பட்ட.
Stupe
-1 n. ஒத்தடக் கம்பளித்துணி, அறுவைக் கட்டுத்துணி, (வினை.) ஒத்தடக் கம்பளித் துணியிட்டுக் கட்டு, ஒத்தடங்கொடு, அறுவைக்கட்டுத் துணியிடு.
Stupe
-2 n. (இழி.) முட்டாள்.