English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scenographic
a. நேர்க்காட்சி ஒவியஞ் சார்ந்த, நேர்க்காட்சி அளவை வரைந்து காட்டுகிற.
Scenography
n. நேர்க்காட்சி ஓவியம், திரை ஓவியம்.
Scent
n. மணம், நறுமணம், வாசனை, வேட்டைநாய் வகையில் மோப்பம், கூர்ந்துணருந் திறம், (வினை.) முகர்ந்து பார், முகர்ந்தறி, மோப்பம் பிடி, மோப்பம் பிடித்துக் கண்டுபிடி, இருப்பதாக ஐயுறு, நறுமணமூட்டு, வாசனையேற்று.
Scent-bag
n. விலங்குடலின் நாறுபை, நரி-வேட்டைநாய்களின் மோப்பப் பயிற்சிக்கான பெருஞ்சீரகம் அல்ங்கிய செயற்கை மோப்பப் பை.
Scented
a. நறுமணம் ஊட்டப்பட்ட, நறுமணப்பொருள் நிரப்பப்பட்ட.
Scent-gland
n. விலங்குகளின் நறுமணச்சுரப்பி.
Scepsis
n. மெய்ந்நுல்வகை ஐஸ்ம்.
Sceptic
n. முற்கால ஐயுறவுவாதி,பிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர், தற்கால ஐயுறவுவாதி, பிரோவைப் பின்பற்றும் தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர், கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர், சமய ஐயுறவாளர், புறச்சமயவாதி, நாத்திகர், ஐயுறவு மனப்பான்மையுடையவர், தனிக்கொள்கை வகையில் மெய்ம்மையினை ஐயுறுபவர், தனிச்செய்தி வகையில் ஐயுறுபவர், நல நம்பிக்கையற்றவர், நல வெறுப்புக் கோட்பாட்டாளர்.
Sceptical
a. ஐயுறவு மனப்பான்மையுடைய, முழுதும் நம்பிவிட மறுக்கிற, ஆராயாது ஏற்க விரும்பாத, கேள்வி விசாரணை மனப்பான்மை கொண்ட, ஐயுறவுவாதியான, பீரோவின் ஐயுறவுவாதம் மேற்கொண்ட, ஐயுறவுவாதஞ்சார்ந்த, அறிவின் உறுதிப்பாட்டை மறுக்கிற, ஐயுறவுவாதத்தை ஆதரிக்கிற, ஐயுறவுவாதிகளின் கருத்துக்களால் தூண்டப்பட்ட.
Scepticism
n. ஐயுறவுவாதம், அறிவு ஐயுறவுக்கோட்பாடு, அறிவில் உறுதிப்பாடின்மை, முடிந்த கருத்து முடிவின்மை, தற்கருத்தற்ற தன்மை, இறைமை உறுதி மறுப்புக்கோட்பாடு, இறை ஐயுறவுக்கோட்பாடு, ஓயா ஐயுறவு, கிறித்தவ உண்மைகளில் ஐயுறவுடைமை, ஐயுறவு மனப்பான்மை.
Sceptre
n. செங்கோல், அரசாணை.
Sceptred
a. செங்கோல் ஏந்துகிற, அரசனுக்குரிய.
Schappe
n. கழி பட்டிழை, கழியிழைப் பட்டு.
Schedenfreude
n. பிறர் கேட்டில் மகிழ்வு.
Schedule
n. அட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.
Scheduled
a. குறிப்பிட்ட அட்டவணையிற் சோர்க்கபட்ட.
Schema
n. பொழிப்பு, சுருக்கம், உருவரைப்படிவம், இனப்பொதுவுருப்படிவம், உருவரைப்படம், திட்டம், புனைவுருப்படிவம், (அள.) மும்மடி அளவைமுறை, (இலக்.) சொல்லணி.
Scheme
n. திட்டம், வகைதுறை ஏற்பாடு, இடநிலை விளக்கவரைப்படம், வகை புணர்ப்புமுறைப் பட்டியல், வகைமுறைப் பட்டி, முறைவகுப்பு, கால விவரப்பட்டி, கால அட்டவணை, செயற்படுத்துவதற்கான திட்டம், உருவரைச் சட்டம், பாடத்திட்டம், செயல்வரைச்சட்டம், சூழ்ச்சிமுறை, (வினை.) சூழ்ச்சிசெய், மறைவாகத் திட்டம் வகு, வகைதுறைத் திட்டஞ் செய்.
Schemer
n. திட்டம் வகுப்பவர், சூழ்ச்சியாளர், சதிசெய்பவர்.
Scheming
a. சதி செய்கிற, மறை சூழ்ச்சியில் ஈடுபடுகிற, ஏற்பாடு வகுத்தமைக்கிற, வழிவகை செய்கிற.