English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scherzando
00*(இசை.) விளையாட்டு முறையாக.
Scherzo
n. எழுச்சி மிக்க நடனத்தில் விரையியக்க அசைவு.
Schilling
n. ஆஸ்திரேலிய நாணய வகை.
Schipperke
n. வாலில்லாக் கருநாய், பெல்ஜிய நாய்வகை.
Schism
n. திருச்சபை உட்பிளவு, திருச்சபை உட்பிரிவினைக்குழு, கருத்து மாறுபாட்டு உட்குழு, உட்பிரிவினை தூண்டுங் குற்றம், உட்பிளவு வளர்க்குங் குற்றம்.
Schismatic
n. திருச்சபை உள்வேறுபாட்டுக் கொள்கையைஉடையவர், திருச்சபை உட்பிரிவினைக்குழுவின் வேறுபாட்டினை ஆதரிப்பவர், திருச்சபை உட்பிரிவினைக்குழு உறுப்பினர், திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர், சமுதாய உட்பிளவு ஆதரவாளர், (பெ.) திருச்சபை உட்பிரிவினையை ஆதரிக்கிற, சமுதாயப் பிளவுக்குற்றமுடைய.
Schist
n. கொடுவரிப் பாறை, பல்வகை கனிப்பொருட்படுகைகள் கொண்டு ஒழுங்கற்ற மெல்லிய தகடுகளாக உடையும் இலை போன்ற அமைப்புடைய பாறைவகை.
Schizanthus
n. வண்ணமலர் ஆட்டைச் செடிவகை.
Schizomycete
n. நுண்மப் பிளப்பின உயிரி.
Schizophrenia
n. முரண்மூளை நோய், எண்ணம்-உணர்வு-செயல் முதலியவற்றில் தொடர்பற்ற மூளைக்கோளாறு வகை.
Schnapps, schnaps
வெறிய வகை.
Schnauzer
n. இழைமயிர் உடைய செர்மன் வீட்டுவளர்ப்பு நாய்வகை.
Schneider Trophy
n. படகடி விமானத்துக்கான (1ஹீ13-இல் நிறுவப்பட்ட) அனைத்துலக விருதுப்பரிசு.
Scholar
n. மாணவர், புலவர், கற்றறிவாளர், சீடர், பல்கலைக்கழக ஆதரவுப் பயற்சியாளர், பெருமக்கள் பள்ளி ஆதரவுப் பயிற்சியாளர்.
Scholar-like
a. புலவர் போன்ற.
Scholarliness
n. ஆழ்புலமை.
Scholarly
a. புலமை சான்ற, இலக்கியமேதைக்கு இயல்பான.
Scholarship
n. புலமை, உதவிச்சம்பளம்.
Scholastic
n. இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர், இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர், தற்கால இறைமை வாதி, இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பள்ளிக்கல்விக்குரிய, பள்ளிப்பயிற்சித் தொடர்பான, பள்ளி ஆசிரியருக்குரிய, கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய, கல்வித்துறை சார்ந்த, கலைமுறையான, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த, நடைமுறை மரபுச்சார்பான, புலமைச்செருக்கு வாய்ந்த, இறைமை வாத பண்டிதரியல்புள்ள, இறைமை வாத பண்டிதருக்கரிய, மயிரிழைவாதம் புரிகிற.