English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scotism
n. (வர.) டன்ஸ் ஸ்காட்டஸ் (மறைவு 130க்ஷ்) என்பாரின் மறை தத்துவக் கொள்கைகள்.
Scotist
n. டன்ஸ் ஸ்காட்டல் என்பாரின் மறை தத்துவக் கொள்கையாளர்.
Scotland Yard
n. லண்டன் காவல்துறை நிலையம், பிரிட்டன் தலைநகரப் போலிஸ், இங்கிலாந்தின் குற்ற வேவுத்துறைத் தலைமையிடம்.
Scotodinia
n. தலைச்சுற்று, மயக்கம்.
Scotograph
n. இருளில் எழுத உதவும் பொறி.
Scotoma
n. (மரு.) திரைநோய், பார்வைப் பரப்பெல்லையில் அரைகறை மறைப்புக்கோளாறு.
Scotsman
n. ஸ்காத்லாந்து நாட்டினர்.
Scotswoman
n. ஸ்காத்லாந்துநாட்டுப் பெண்.
Scottice
adv. ஸ்காத்லாந்து மொழியில், ஆங்கிலத்தின் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார வழக்கு மொழியில்.
Scotticism
n. ஸ்காத்லாந்து மொழிவழக்காறு, ஆங்கில மொழியில் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார வழக்குமொழிச் சொற்களோ சொற்றொடரோ கலக்கும் பண்பு.
Scotticize
v. ஸ்காத்லாந்து நடைமுறைகளில் தோய்வி, ஸ்காத்லாந்துமக்கள் மாதிரியைப் பின்பற்று, ஸ்காத்லாந்து மக்கள பழக்கவழக்கங்களைப் பார்த்துப் பின்பற்று, ஸ்காத்லாந்து மக்களின் மொழிமரபுக பின்பற்று.
Scoundrel
n. கயவன், போக்கிரி. ஓழுக்கமிலி.
Scount
-2 v. வெறுத்தொதுக்கு, பரிகசி, அவமதித்து உதறு.
Scour
-1 n. கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம், கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு, ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள், (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து, உரசிப் பளபளப்பாக்கு, கால்வாய் துப்புரவு செய், துறைமுகம் தூர்வுசெய், குழாய் தூய்மைப்படுத்து, குடலை நன
Scour
-2 v. நாடி அலைந்துதிரி, சுற்றித்திரி, தேடியலை, துருவித்தேடு.
Scourer
n. தேய்துத் துப்புரவாக்குபவர், தேய்த்துத் துப்புரவாக்கும் கருவி, தேய்த்துத் துப்புரவு செய்வதற்குரிய மணை, பேதி மருந்து.
Scourge
n. சவுக்கு, சாட்டை, கசை, தெய்வதண்டனைக்குரிய கருவி, தெய்வதண்டனைக்குரிய கருவியாய் அமைபவர், தெய்வதண்டனையாய்க் கருதப்படுங் கொள்ளைநோய், (வினை.) சாட்டையாலடி, தண்டி, அடி, துன்புறுத்து, கொடுமைக்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, தொல்லைப்படுத்து.
Scouring-rush
n. தேய்ப்புத் துரிசாகப் பயன்படும் புதர்.
Scout
-1 n. சாரணர், ஒற்றர், உளவாள, வேவுகாணி, படைத்துறையில்எதிரியிடமிருந்து புலங்காண முயல்பவர், செய்தி சேகரிப்பவர், சுற்றுக்காவலர், திரிகாவலர், வேவுக்கப்பல், விரைதிரிவு விமானம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வழக்கில்கல்லுரிப் பணியாள், மரப்பந்தாட்டத்தில் களக்காவலர், கட
Scoutmaster
n. சாரணர் தலைவர், குருளையரின் ஆசிரியர்.