English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scorner
n. இகழ்பவர், வெறுத்தொதுக்குபவர், தகாதென மறுப்பவர்.
Scornful
a. ஏளனஞ் செய்கிற, வெறுத்தொதுக்குகிற, இகழ்ச்சியான, இறுமாப்புடைய.
Scornfulness
n. ஏளன வெறுப்புடைமை.
Scorpio
n. விருச்சிக ராசி, தேளுரு வான்மனை.
Scorpioid
n. (தாவ.) தேளின் கொடுக்குப்போன்ற மலர்க்கொத்துக்கூம்பு, (பெ.) (தாவ.) செடி வகையில் தேளின் கொடுக்குப்போல் மேல்நோக்கிச் சுருண்ட மலர்க்கூம்புடைய.
Scorpion
-1 n. தேள், உலோகமுட்கள் உட்பதித்த சாட்டை, பண்டைக் கொட்டைக் கவணெறி பொறிவகை.
Scorpion-broom
n. மஞ்சள் நிற மலரையுடைய புதர்ச்செடிவகை.
Scorpion-fish
n. தலையிலும் செதில்களிலும் முள்ளுடை மீன்வகை.
Scorpion-plant
n. பால்வெண்ணிற மலர்த்தாவர வகை.
Scorpion-shell
n. நீள் முள்ளாடைச் சிப்பிவகை.
Scorzonera
n. கறிக்கிழங்கு வகை.
Scot
-1 n. (வர.) முற்கால இறைவரி, மரபு வரி, கணிப்பு வீதப்பங்கு.
Scot
-2 n. அயர்லாந்திலிருந்து கி.பி. 6ஆம் நுற்றாண்டில் ஸ்காத்லாந்திற்குக் குடிபெயர்ந்துசென்ற இனக்குழுவினர், ஸ்காத்லாந்து நாட்டவர்.
Scotch
-1 n. ஸ்காத்லாந்து தாழ்நிலங்களிற் பேசப்படும், ஆங்கில வட்டார வழக்குமொழி, (பெ.) ஸ்காத்லாந்து சார்ந்த, ஸ்காத்லாந்து நாட்டு மக்களுக்குரிய, ஆங்கிலமொழியின் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார மொழி சார்ந்த.
Scotch
-2 n. நொண்டி ஆட்டக்கோடு, (வினை.) வெட்டிடு, வெட்டுப்புண்படுத்து, சிறிது பயனற்றதாக்கு.
Scotch
-3 n. சக்கர அண்டைக்கட்டை, சக்கரம் உருண்டோ டாமல் தடுக்கும் ஆப்பு, (வினை.) சக்கரத்துக்கு அண்டைக்கட்டைகொடு, உருளாது தடையாப்புச் செய்.
Scotch-and-English
n. கைதிகள் அடித்தளம்.
Scoter
n. பெருங் கடல்வாத்து.
Scot-free
a. அறவே கட்டணமில்லாத, தண்டனையில்லாத, கேட்டுக்கு இடமற்ற.
Scotia
n. தூண்டிக்குழிவு.