English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scolex
n. நாடாப்புழுவின் தலை.
Scoliosis
n. முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு.
Scolopaceous, scolopacine
a. உள்ளான் குருவியினஞ் சார்ந்த.
Scolopendrine
a. பூரான் இனஞ் சார்ந்த, பூரான் போன்ற, பூரானுடன் தொடர்பு கொண்ட.
Scolopendrium
n. சூரல் வகை.
Scomber
n. கானாங்கெளுத்தி, கானாங்கெளுத்தியின் மீன் வகை.
Sconce
-1 n. மெழுகுத்திரி, மெழுகுவர்த்தி விளக்கு.
Sconce
-2 n. சிற்றரண், கடவுத்துறை அரண், கணவாய்க்காவலரண், மறைதட்டி, காப்பிடம், (பே-வ) அடுப்படியடுத்த நிலை இருக்கைக் கல்.
Sconce
-3 n. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுமேசைத் தவறுதலுக்கான குடிதேறல் பறிமுதல், (வினை.) ஆக்ஸ்போர்டில் மேசை ஒழுங்குமுறை தவறியதற்குக் தண்டனையாகக் குடிதேறல் பறிமுதல் செய், துணைவேந்தர் வகையில் பல்கலக்கழக அலுவலர் மீது ஒழுங்குமுறைத் தவறுதலுக்கான தண்டத்தொகை விதி
Sconce
-4 n. தலை, உச்சந்தலை.
Scone
n. முக்குவடை, கோதுமை அல்லது வாற்கோதமை மாவால் குழி இரும்புத் தட்டில் வேவிக்கப்படும் முக்கோண வடிவான பண்ணியவகை.
Scoop
n. சட்டுவக்கரண்டி, வார்குவளை, கோப்பைக்கரண்டி, அறுவை குடைவுக்கருவி, பாலேடு அருந்து கரண்டி, கரித்தட்டு, கரிவாரும் கூடை, கொள்ளைலாபம், போட்டிக்கு முந்துபேராதாயம், பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி, முந்து செய்தி, (வினை.) அள்ளி எடு, வாரி எடு, கோரி எடு, முகந்தெடு, குடைந்தெடு, சூர்ந்தெடு, உட்குடைவாக்கு, விரைகொள்ளை ஆதாயமடி, போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை, பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
Scooper
n. குடைந்தெடுப்பவர், குடைந்தெடுப்பது, மொண்டெடுப்பவர், மொண்டெடுப்பது, செதுக்குக் கலைஞர் கருவி, நீள் அலகுச் சதுப்புநிலப் பறவை.
Scoop-net
n. தூர்வாரி வலை, ஆற்றடியை வாரிப்பெருக்கும் வலை, நீள்பிடித் தூண்டில்வலை.
Scoop-wheel
n. சூழ்தொட்டிகளால் நீரிறைக்கும் சக்கரப் பொறி.
Scoot
n. பாய்ச்சல், விரைசெயல், (வினை.) ஓடு, சாடு, பாய்ந்துசெல், சரேலென்று செல்.
Scooter
n. மோட்டார் சைகிள், சிறுவர் மிதிவண்டி, நீர்ப்படகு.
Scopa
n. மயிர்க்கற்றை, தேனீக்கள் வகையில் பூந்துகளைக் கொண்டுசெல்லும் காலடி மயிர்த்தூரிகை.
Scopate
a. மயிர்க்கற்றை கொண்ட, மயிர்க்கற்றை போன்ற.