English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scutch-blade
n. சணல்கோது கருவி.
Scutcheon
n. கிடுகு, விருதுதாங்கிய கேடயம், குலவிருதுப்பட்டயம், மரபுச்சின்னம், சாவித்துளையில் சுழலும் காப்புத்தகடு, பெயர்ப்பட்டயம்.
Scutcher, scutching-sword
n. சணல்கோது கருவி.
Scute
n. மேல்தோடு, முதலை-ஆமை முதலியவற்றின் உடல் மேலுள்ள செதிள் அல்லது எலும்புக் கவசத்தகடு.
Scutellar
a. பறவைக்காலின் வன்செதிள் சார்ந்த, வண்டின் மார்புப்பகுதிக் கவசத்தகடு பற்றிய, தாவரச் செதிள் சார்ந்த.
Scutellate
a. செதிளடர்ந்த, தோடான, பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த, பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த, செதிள்தகடு போன்ற.
Scutellation
n. செதிள் பொதிவமைதி, தோடுபொதிவு.
Scutellum
n. (வில., தாவ) தாவரங்கள்-வண்டுகள்-பறவைகள் முதலியவற்றின் மீதுள்ள சிறுதகடு போன்ற உறுப்பு, பறவைக்காலின் வன்செதிள்களுள் ஒன்று.
Scuttle
-1 n. கரித்தட்டம், கரிக்குடுவை.
Scuttle
-2 n. புகுமுகப்புழை, மோட்டு நிறப்பு, மூடியுடன் கூடிய மோட்டுத்தொளை, சுவர்முகம், அடைப்புடன் கூடிய சுவர்ப்புழைவாய், அடித்தளப் புகுமுகம், மூடித்திறக்கக் கூடிய கப்பல்கள் அடிவாய்த்திறப்பு, இயக்கு இடைத்தளம், பொறிவண்டியில் இயந்திர உடற்பகுதி இணைப்புக்கூறு, (வினை.)
Scuttle
-3 n. விரைவோட்டம், திடீர்ப்புறப்பாடு, தப்பியோடுதல், கடுவேகமறைவு, (வினை.) விரைந்தோடு, துன்பம்-அபாயம் முதலியவற்றிலிருந்து தப்பிக் கடுகியோடு.
Scuttle-butt, scuttle-cask
n. கப்பல் அடித்தளக் குடிநீர்மிடா.
Scutum
n. நிலைக் கேடயம், பண்டை ரோமப் படைவீரரின் நீள்வட்ட அல்லது நீளரைவட்ட வடிவமான நெடும் பரிசை, (உள்.) முட்டுச்சில்லு, கவச மேல்தோடு, ஆமை-முதலை முதலிய உயிரினங்களின் வன் மேலோடு.
Scylla
n. கிரேக்க பழங்கதை மரபில் ஜேஸன் என்ற வீரனின் கடற்பயணங்களின்போது ஒரு கரையில் பெருஞ்சுழி அமைந்த கடலிடுக்கில் மறுகரைப் பாறைமீது அன்ர்ந்திருந்த ஆறுதலைப்பூதம்.
Scyphus
n. குடுவைக் குடிகலம், இருகைப்பிடிக் குடிகிண்ணம், (தாவ.) கிண்ணம் போன்ற பகுதி.
Scythe
n. புல்லரிவாள், பயிர் அரிவாள்த, முற்காலப் போர்த்துறைத் தேர்களின் இருபுறங்களிலும் இருசோடி இணைக்கப் பட்ட புடையலகு, (வினை.) புல்லரிவாளால் வெட்டு, அரிவாளால் பயிர் அரி.
Scythian
n. பண்டைய சித்தியக்குடியினர், கருங்கடலுக்கு வடக்கே உள்ள பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய சித்தியக் குடியினஞ் சார்ந்த, கருங்கடலுக்கு வடபால் வாழ்ந்த பண்டைய இனஞ் சார்ந்த.
Sddle-bags,n pl.
பொதி மூடைகள், சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள், நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை.
Sdemery-wheel
n. சாணைக்கல், சாணைபிடிப்பதற்காகக் குருந்தக்கல் பொடி ஒட்டப்பெற்ற சக்கரம்.
Se defendendo
adv. கொலை வழக்கு வகையில் தற்கப்பிற்காக.