English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Secretaire
n. எழுத்தர் சாய்மேசை, எழுது பொருள்கள் வைக்கும் இழுப்பறைச் சாய்மேசை.
Secretarial
a. செயலாளருக்குரிய, செயலாளரின் சார்பான, செயலாண்மைத் தொடர்பான, செயலாண்மைத்துறை சார்ந்த.
Secretariat, secretariate
n. செயலாளர் அலுவலகம், செயலாளர் குழுமம், அரசாங்கத் தலைமைச் செயலகம், செயலக அலுவலர் தொகுதி, செயலாண்மையர் அலுவலகம், செயலாண்மையர் பணியகக் கட்டிடம்.
Secretary
n. செயலாளர், செயற்பொறுப்பாளர், அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர், பிரிட்டனில் அலுவலக அமைச்சர், எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை, (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம், காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Secretary-bird
n. காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை.
Secretaryship
n. செயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை.
Secrete
v. மறைத்துவை, மறைவிடத்தில் வைத்து ஔத, சுரப்பி, கசியச்செய்.
Secretion
n. மறைத்து வைப்பு, ஔதத்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர்.
Secretive
a. மறையடக்கும் பாங்குள்ள, மர்மங் காக்கிற, எதையும் பேசாதடங்கி வைத்துக் கொள்கிற, வேண்டுமென்றே பேசாதிருக்க, மட்டுமீறிய ஒதுங்குதல் உடைய.
Secretly
adv. மறைவாக, பிரார்த்தவகையில் மௌனமாக.
Secretor
n. சுரப்பிப்பவர், சுரக்கச் செய்வது.
Secretory
a. சுரப்பிக்கிற.
Secrets
n. pl. மறை உறுப்புக்கள்.
Sect
n. தனிக்குழு, உட்குழு, தனிப்பிரிவு, கிளைப்பிரிவு, சமயக்கட்சி, சமய உட்பிரிவு, சமயத்துறையில் பிரிந்து செல்பவர் குழு, சமயத்துறையில் ஒழுங்குப்பட்ட பெரும்படி அமைப்பு, கருத்துவேறுபாட்டுக் குழு, சமய மறுப்பாளர்குழு, சமய அறிவுத்துறைகளில் தனி ஒரவரைப் பின்பற்றும் மரபுக்குழு.
Sectarian
n. கிளைப் பிரிவினர், உட்குழுவினர், உட்கட்சி சார்ந்தவர், குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர், சமயத்தனிக்குழுவினர், (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர், (பெ.) கட்சி சார்ந்த, உட்குழுவினுக்குரிய, சமய உட்குழுப்பற்றுடைய, குறுகிய கட்சி மனப்பான்மையுடைய, உட்கட்சி வேறுபாடு காட்டுகிற, உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த, பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற.
Sectarianism
n. சமயப் பிரிவுணர்ச்சி, சமய உட்கட்சி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய பற்று.
Sectarianize
v. சமய உட்குழு மனப்பான்மையூட்டு, சமய உட்குழுக் கருத்துக்களில் தோய்வி, சமய உட்பிரிவின் ஆட்சிக்குட்படுத்து, சமய உட்பிரிவாய் இயங்கு, உட்பிரிவுகளாகப் பிளவுபட்டியலு
Sectary
n. சமயப் பிரிவினர், கொள்கை பின்பற்றுபவர், சீடர், வழிபாட்டாளர், நிறுவப்பட்ட நாட்டுத் திருச்சபையை ஏற்க மறுப்பவர்.
Sectile
a. கத்தியால் உடைபடாமல் வெட்டப்படவல்ல.
Section
n. கூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.