English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sectional
a. பிரிவு சார்ந்த, பிரிவிற்குரிய, பிரிவுகளுக்குரிய, பிரிவாயுள்ள, பிரிவுகளால் ஆக்கப்பட்ட, வெட்டுவாயான.
Sectionalism
n. வகுப்புணர்ச்சி.
Sectionalize
v. பிரிவுகளாக்கு, பிரிவுகளாக வகு.
Section-mark
n. பத்திகுறி, புத்தகப் பிரிவுக்குறி.
Sector
n. சுற்றுக் கண்டம், இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு, களப்பகுதி, படையில் பேரரங்கப் பிரிவு, (கண.) சுவர் அளவுகோல், வரையளவுடைய இருஅளவுகோல்களைப் பிணைத்த கருவி, (வான்.) சுற்றுக்கோணாடி, வரையளவுடைய வில் வளைவில் இயங்கும் தொலை நோக்காடி, உருளைக்கூறு, கோளத்தில் சுற்றுக்கண்டத்தின் சுழலியக்கத்தால்ஏற்படும் பிழம்புரு, கூறு, அரங்கத்துறை.
Sectoral
a. வட்டக்கூறு சார்ந்த.
Sectorial
n. கோரைப்பல், இறைச்சியைக் கிழிப்பதற்காகக் கத்தரிக்கோல்போலப பயன்படும் நீண்ட வெட்டுப்பல், (பெ.) (வடி.) வட்டக்கூறு சார்ந்த, (வில.) உண்ணிகளின் கோரைப்பல் வகையில் வெட்டுவதற்கேற்றவாறு அமைந்துள்ள, கத்தரிக்கல் போன்று மறுதாடைப் பற்களுடன் இயங்குகிற.
Secular
n. சமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு, (பெ.) இவ்வுலகிற்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ்சாராத, திருநிலையற்ற, திருமடச் சார்பற்ற, பொதுநிலை வாழ்விற்குரிய, சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற, என்றுமுள்ள, நிலைத்த, நீடித்து நிலவுகிற, பேரூழிக் காலம் நிலவுகிற, விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய, ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற, நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற, ஊழிக்காலம் நிலவுகிற, நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற.
Secularism
n. சமயச்சார்பிலாக்கோள், அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் மதச்சார்பின்மைக் கோட்பாடு, ஹோலியோக் என்பாரின் சமுதாயமுறை ஒழுக்கவியல்.
Secularist
n. சமயச் சார்பற்றவர், சமயப்பற்று வழிபாடு மறுத்த கோட்பாட்டாளர், சமயப்பற்று வழிபாடு மறுத்து வாழ்பவர், அரசியல்-ஓழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டாளர், (பெ.) சமயச் சார்பற்ற, சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய, சமயச் சார்பின்மைக் கோட்பாட்டை ஆதரிக்கிற.
Secularistic
a. சமயச் சார்பற்ற, சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய, சமயச் சார்பின்மைக் கோளினை ஆதரிக்கிற.
Secularity
n. மதச்சார்பின்மை, மட்டற்ற உலகியல்பற்று, சமயபற்றின்மை, ஊழிக்கால இயங்கற் பண்பு.
Secularization
n. மதச்சார்பு விலக்கீடு, அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம், திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு, திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு, மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு, தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு.
Secularize
v. மதச்சார்பற்றதாக்கு, அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு, உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று, சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து, மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி.
Secularly
adv. மதச் சார்பற்ற முறையில், சமயஞ்சாராப் பொதுநிலையில்.
Secund
a. (தாவ., வில.) ஒருபக்கமமாக மட்டும் வரிசைப்படுத்தப்பெற்ற.
Secundly
adv. ஒருபுறமாக மட்டும் வரிசைப்படுத்தப்பட்ட முறையில.
Secundum
prep. இணக்கமாக, அனுசரித்து.
Secundum artem
adv. செயற்கையாக, திறைமையுடன், அறிவியல் முறைப்படி.