English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sea-whistle
n. ஊதுபைம்மீன், ஊதலாகப் பயன்படும் பையுடைய மீன்வகை.
Sea-wife
n. பாறைபற்றி வாழும் பற்களும் முட்செதிள்களும் உடைய பகட்டுவண்ண மீன்வகை.
Sea-wing
n. ஈரிதழ்த்தோட்டு நத்தை வகை.
Seawithwind
n. கடற்பாசி வகை.
Sea-wolf
n. கடல்மீன்வகை, கடற் கொள்ளைக்காரன்.
Seawoman
n. கடற்கன்னி, கடலணங்கு.
Seaworthy
a. கடற்பயணத்திற்குப் பொருத்தமான, கடலோடும் கட்டுர வலிமையுடைய.
Sebaceous
a. கொழுப்புச் சார்ந்த, கொழுப்பினை உடைய.
Sebestan, sebesten
மருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட திராட்சை போன்ற பழம்.
Sec
-1 a. இன்தேறல் வகையில் உலர்வான.
Secant
n. வெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Secateur
n. தழைக் கத்திரிக்கோல், செடிகொடிகளை வெட்டுவதற்கான பெரிய கத்தரிக்கோல்.
Secco
n. சுவரோவியம், உலர்சாந்த மீது தீட்டப்படும் வண்ண ஓவியம்.
Seccotine
n. பசைநீர், பசைக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் நீர்மவகை, (வினை.) பசைநீர் கொண்டு ஒட்டு.
Secede
v. பிரிந்து செல், குழுவின் உறுப்பினர் பதவியினின்றும் முறையாக விலகிக்கொள், திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டு செல், கூட்டிலிருந்து விலகிவிடு, அரசியல் அமைப்பிலிருந்து பிரிந்துவிடு.
Seceder
n. பிரிந்து செல்பவர்.
Secernent
n. (உட.) சுரப்பு உறுப்பு, சுரப்பூட்டும் மருந்து, (பெ.) சுரப்பு ஊக்குவிக்கிற.
Secession
n. பிரிந்து செல்லுதல்.
Seclude
v. விலக்கிவை, ஒதுக்கிவை, தனிமைப்படுத்து.