English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Seaplane
n. முந்நீர் விமானம், கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானுர்தி.
Seaport
n. பட்டினம், துறைமுக நகரம்.
Sear
-1 n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
Sear
-2 a. இலைகள்-மலர்கள் வகையில் வதங்கிப்போன, உலர்ந்துவிட்ட, வயது வகையில் சோர்வுற்ற, வாட்டமடைந்த, (வினை.) வதங்கிப்போ, உணங்கிவிடு, சருகாக்கு, சூடிடு, சூடிட்டுத் தீயச்செய், உணர்ச்சியறச் செய், மரத்துப்போகவை.
Search
n. தேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
Searching
n. தேடுதல், ஆய்தல், கூர் ஆய்வு, ஊடுருவுநோக்கு, துளைப்பு, துளைத்துச் செல்லல், (பெ.) தேடுகிற, ஊடுருவுகிற.
Searchlight
n. நீடொளி, எதிர்க்கதிர் விளக்கம், பாவொளி விளக்கம், ஔத எதிரொளிக் கதிர்களைக் கற்றையாக ஒருமுகப்படுத்தும் ஔத விளக்கம், பாவொளி, எதிரி விமான முதலியவற்றை இருளிற் காண உதவும் கூம்பொளி விளக்கத்தின் ஔதக்கற்றை.
Search-party
n. தேடுங்குழு, காணாமற்போனவற்றைத் தேடிக் காண்பதற்குரிய குழாம்.
Search-warrant
n. சோதனை எழுத்தாணை.
Searing-iron
n. சூட்டுக்கோல்.
Sea-room
n. கப்பல் திருப்புதுறை, கடலில் கப்பல் திரும்புவதற்கு வாய்ப்பான இடம்.
Sea-shore
n. கடற்கரைப் பகுதி, (சட்.) வேலை ஏற்ற இறக்க இடைத்தளக்கரை.
Seasick
a. கடற் குமட்டல் கோளாறுடைய.
Seasickness
n. கடற்குமட்டல் நோய், கடலிற் கப்பல் இயக்கத்தால் ஏற்படும் குமட்டல்நோய்.
Seaside
n. கடலடுத்த இடம், நற்கரை உடல் நலத்திற்குகந்த நிலையான கடற்கரை வாழ்விடம், நற்பாக்கம், விடுமுறைக் காலத்தில் தங்கும் வாய்ப்புடைய உல்ல் நலத்திற்குகந்த கடற்கரையிடம்.
Sea-sleeve
n. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தி மறையும் மீன்வகை.
Season
n. பருவகாலம், ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று, பருவம், செவ்வி, வேளை, உரிய தறுவாய், குறிப்பிட்ட கால எல்லை, வரையறையுடைய காலம், பருவமுறை, வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம், (வினை.) பக்குவப்படுத்து, கலந்து பதப்படுத்து, சுவைப்படுத்து, தனிச்சுவையூட்டு, முதிர்வுறாச் செய், காலத்தால் உரம் பெறுவி, தேர்ச்சியுறுவி, அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு, தனித்திறமூட்டு, தனிப்பண்பு தோய்வி, பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு, பழக்கப்படுத்து, சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு, நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு, மாற்றுச்சுவையேற்று, மிதப்படுத்து, முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு, தனிச்சுவைக்கு உரியதாயியலு.