English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Seasonable
a. பருவகாலத்திற்குத் தகுந்த, பருவகாலத்திற்கு இயல்பான, பருவகாலத்தில் வழக்கமாய்க் காணப்படம் வகை சார்ந்த, தறுவாய்க்கேற்ற.
Seasonal
a. பருவகாலத்திற்குரிய, பருவகாலத்திற்கேற்ற.
Seasoning
n. பதப்பாடு, பக்குவப்படுத்துதல், பக்குவம் செய்யும் முறை, புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை, சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள், சம்பாரம், மாசாலை, வைர இழைப்புத்தூள், வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள், கருப்பூச்ச, பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச.
Seasonless
a. பருவகால வேற்றுமையற்ற.
Season-ticket
n. பருவச் சுழல் சீட்டு.
Seat
n. இருக்கை, ஆசனம், நாற்காலி, அரியணை, விசுப்பலகை, மணை, சேணம் குதிரை மேலிருக்கை, குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை, இருக்கை அமர்வு, இருக்கை அடிப்பகுதி, இயந்திர ஆதாரப்பகுதி, பிட்டப்பகுதி, காற்சட்டைப் பிட்டப் பாகம், இருக்குமிடம், அமைப்பிடம், பண்பு வகையில் ஆதாரம், மூல இடம், நாட்டுப்புற மாளிகை, நாட்டுப்புறத் தோட்ட மாளிகை, இருக்கை உரிமை, மன்ற அமர்வுரிமை, உறுப்பினர் நிலை, மன்ற உறுப்பினர் பதவி, (வினை.) அமர்வி, இருத்து, அமர்வுகொள், இருக்கைகள் பொருத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு, நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய், காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய், நிலைகொள்ளுவி, குறிப்பிட்ட இடத்திற் பொருத்து.
Sea-tang, sea-tangle
n. கடற்பாசி வகை.
Seated
a. இருக்கையின் உடைய, இருக்கைகள் வாய்ந்த, உட்கார்ந்திருக்கிற, இடங்கொண்ட, குறிப்பிட்ட இடத்திலுள்ள, நிலையான, நிலைத்திருக்கிற.
Seathless
a. உறையற்ற, கூடற்ற, மேல் தோலற்ற, பாதுகாப்பற்ற.
Seating
n. இருக்கைகளில் அமர்த்துகை, இருக்கைகள் இணைப்பு, இருக்கை ஒழுங்கமைவு, தாங்கும் மேற்பரப்பு, இருக்கைகளுக்கான மூலப்பொருள்களின் தொகுதி.
Sea-toad
n. அகன்ற வாயுடைய மீனுண்ணும் மீன்வகை.
Seatstick
n. உட்கார உதவக்கூடிய நடையூன்று கோல்.
Sea-urchin
n. கடல் ஊமத்தை, முட்களுள்ள முட்டை வடிவான கூட்டினையுடைய கடல் உயிர்வகை.
Sea-wall
n. கடல் தடுப்புச் சுவர்.
Sea-walled
a. கடல் தடுப்பமைவுடைய, கடல் சூழ்ந்த.
Seaward
a. கடல் நோக்கிய, கடல்திசையான, நடுக்கடல் நோக்கிய, ஆழ்கடல் நோக்கிய, (வினையடை.) கடல் நோக்கி, ஆழ்கடல் நோக்கி.
Seawardly
adv. கடல் திசையாக.
Sea-ware
n. கடற்பாசி உரம்.
Sea-way
n. கடல்நெறி, கப்பல் செல்லும் பாதை, கருங்கடல்.