English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tambour
n. தம்பட்ட வகை, ஒருகட் பெருமுரசு, துன்னல் வட்டு, பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம், பூவேலைப் பட்டுத்துகில்., தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல், கட்டுமானங்களின் வட்டப்பகுதி, திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில், முரசொலிர யெழுப்பும் மீன்வகை, முரசுவடிவ மீன்வகை, கோட்டைப்பாதை வேலியரண் காப்பு, கோட்டைவாயில் அகழரண் காப்பு, (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய், பூ வேலைத் துன்னல் செய்.
Tambourin
n. சேண்டை, பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை, சேண்டை நடனவகை, சேண்டைநடன இசையமைப்பு.
Tame
a. பழகிய, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட, படிமானமான, வசப்படுத்தப்பட்ட, சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட, முரட்டுத்தன்மையற்ற, மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற, (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட, செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட, பணிந்து போகிற, ஊக்கமற்ற, துடிப்பற்ற, கிளர்ச்சியற்ற, செயலாற்றலற்ற, பண்பு முனைப்பற்ற, (வினை) பழக்கு, பணியவை, படிமானமுடையதாக்கு, வசப்படுத்து, மூர்க்கத் தன்மை குறை, அடக்கு, பழக்கி இணக்குவி, கீழ்ப்படுத்து, தடுத்து நிறுத்து, செருக்குக் குலை.
Tamil
n. தமிழ்மொழி, தமிழர்.
Tamilian
n. தமிழர், (பெயரடை) தமழ்மொழி சார்ந்த, தமிழர் சார்ந்த.
Tammany
n. நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் குடியாட்சி கட்சி மைய அமைப்பு, அரசியல் ஊழலுக்குரிய இடம்.
Tammuz
n. பண்டைப் பாபிலோனியரின் ஞாயிற்றுத் தெய்வம், யூத ஆண்டின் பத்தாம் மாதம் (சூன்-சூலை).
Tammy
-1 n. அரிப்பு, பளபளப்பான கம்பிளித் துகில்வகை.
Tammy(2), tam-o-shan,ter
-2 n. குவட்டுத் தொப்பி, வடட அடிப்பகுதியினையுடைய விரிமுகட்டுத் தொப்பி.
Tamp
v. வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச்சுரங்க வாயில் களிமண் திணித்துவை, பாட்டைச் சல்லியை அடித்திறுக்கு.
Tampan
n. தென் ஆப்பிரிக்க கால்நடை நச்சு உண்ணிவகை.
Tamper
-1 n. பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர், அடித்து இறக்குபவர், பாட்டைச் சம்மட்டி, சஜ்ளைகளை அடித்திறுக்கும் குத்துக்கட்டை, வெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர், அடிசம்மட்டி, கொல்லத்துக்காரரின் கருவி.
Tamper
-2 v. தலையிட்டுக்கெடு, குறுக்கிட்டுத் தொந்தரவு செய், இடையிற் புகுந்து மாற்றம் உண்டுபண்ணு, விரருப்ப ஆவணம்-கையெழுத்துப்படி முதலியவற்றில் உமைபெறாத மாற்றங்களைச் செய், இரகசியமாகக் கையாடிக்கெடு, கைக்கூலி கொடுத்து வசப்படுத்து, இரகசியமாகத் திருப்பு.
Tamping
n. வெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல், வெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள்.
Tampion
n. துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான், இசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு.
Tampon
n. குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு, தலைமுடிச் செருகு திண்டு, (வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை.
Tamponade, tamponage, tamponment
அடைப்புப் பயனீடு, அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல்.
Tan
-1 n. இடுக்கை, செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம்.
Tan
-2 n. தோல் பதனிடும் பட்டை, ஆவாரம் பட்டை, சீமை ஆலின் பட்டை, ஆவாரம் பட்டைச் சக்கை, (பெயரடை) மஞ்சள் பழுப்பு நிறமான, (வினை) தோல்பதனிடு, பச்சைத்தோலைப் பதனிட்ட தோலாக மாற்று, வெயில்பட விட்டுப் பழுப்பு நிறமாக்கு, வெயிலிற் காய்ந்து காய்ந்து பழுப்பு நிறமாகு, கடும்ப
Tana
n. படைத்துறைத்த தளம், காவல் நிலையம்