English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tangly
a. ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற, குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள.
Tango
n. தென் அமெரிக்க நடனவகை, (வினை) தென் அமெரிக்க நடனவகை ஆடு.
Tangram
n. புதிர்வெட்டுக் கட்டம், ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு வடிவங்களிற் பொருத்தக்கூடிய சீன சதுரக்கட்ட விளையாட்டுப் பொருள்.
Tanist
n. கெல்டிக் இனத்தலைவருக்குச் சட்டப்படி நிலையிறுதியான பின்னுரிமை யுடையவர், ஆளுபவருக்கு அடுத்தபடியான இனத்தின் தலைமூத்த வீரர்.
Tanistry
n. கெல்ட்டிக் இனத் தலைமைவகையில் மரபுத் தேர்வுரிமை முறை, குடும்பததைச் சேர்ந்தவர்களில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பின்னுரிமை யடையும் ஏற்பாடு.
Tank
n. குளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி.
Tankage
n. நீர்மவகையில் தொட்டித் தேக்கச் சேமிப்பு, தொட்டித் தேக்கக் கட்டணம், தேக்கத்தொட்டி கொள்பரும அளவு, கழிவுக் கொழுப்பு எருவகை.
Tankard
n. மிடாததொட்டி, மேல்மூடியுள்ள பெரிய குடிகலம், மிடாவிலுள்ள பானம், மிடாத்ட்டி கொள்ளுமளவு.
Tank-buster
n. வெடிக்கோடடைத் தாக்குவிமானம், வெடிக்கோட்டை எதிர்ப்புப் பீரங்கிகளையுடைய கப்பல்.
Tanker
n. எண்ணெய்க் கப்பல், பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல்.
Tan-liquor
n. தோல்பதச்சாறு, தோல் பதனிடுவதில் பயன்படுத்தப்படும் நீர்மம்.
Tannate
n. தோல்பதத் துவர், ஆவாரப்பட்டைத் துவர்ப்பொருள் உப்பு.
Tanned
a. தோல்வகையில் பதனிடப்பட்ட, பழுப்புநிறமாக்கப்பட்ட.
Tanner
-1 n. தோல் பதனீட்டாளர்.
Tanner
-2 n. ஆங்கில அரைவௌளி நாணயம்.
Tannery
n. தோற்கிடங்கு, தோற்பதனீட்டகம், தோல் பதனிடுஞ்சாலை.
Tannery
தோல் பதனீட்டகம், தோல் பதனீடு தொழிற்சாலை
Tannic
a. தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த, தோல் பதத்டதுவர் சார்ந்த.
Tanniferous
a. பட்டைப் பதத் துவர் தருகிற.