English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tap
-1 n. வடிவனை, பாய்குழல், மிடாவின் பாய்குழல் அடைப்பு, தனிச் சிறப்புமுறை வடிப்புத்தேறல், வடிதேறல் அருந்தக றை, புரியாணி உள்வரி இழைப்புக் கருவி, ஆணிவேர் (வினை) மிடாவிற்குக் குழாய் முனை பொருத்து, மிடாவில் துளையிடு, மிடாமல் துளையிட்டு நீர்மத்தை வௌதயேற்று, வடியவ
Tap
-2 n. தட்டு, மென்முறைக் கொட்டு, கொட்டொலி, தட்டும் அரவம், (வினை) தட்டு, மெல்லக்கொட்டு, கோல்கொண்டு தட்டு, கதவு தட்டு, கதவில் கொட்டு, மிதியடிக் குதித்தோல் பொருத்து.
Tapa
n. மரவுரி, பசிபிக் தீவுகளில் ஆடையாகவும் விரிப்பாகவும் பயன்படுத்தபடும் மரப்பட்டை.
Tap-borer
n. மிடாத் துளைப்புத துறப்பணம்.
Tap-dancing
n. காற் கொட்டுத் தாள நடனவகை.
Tape
n. தளைப்புப் பட்டை வார், சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை, வார்க்கச்சை, பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை, வார்ப்பட்டை, இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார், வாரிழைத்தாள்., தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை, முடி ஒப்பனை வாரிழை, தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள், நீட்டளவை வார் (இழி) வடிதேறல், புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார், (வினை) தளைவாரால் கட்டு, கட்டுவார் வழங்கு, புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி, ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள, ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள, இயந்திர வார்ப்பட்டைகள் இணை, இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு, தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Tape recorder
வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்
Tapeless
a. வார்பட்டையில்லாத, அளவைவாரில்லாத.
Tape-line, tape-measure
n. நீட்டளவை வார், நெகீழ்வடைய உலோகம் அலிரலது துணிப்பட்டையாலான அளக்கும் நாடா.
Tapen
a. வார்ப்பட்டையாலான, இழைக்கச்சை வடிவான, நாடாபோன்ற.
Taper
-1 n. மெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி.
Taper
-2 n. நீட்டளவை வாரால் அளப்பவர், அளவைவார் பயன்படுத்துபவர்.
Tapestry
n. சுவரின்மீதான திரைச்சீலை, தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை, ஓவியத்திரை, ஓவியத்திரைச்சுருள்.
Tapeworm
n. நாடாப் புழு, ஒட்டுயிரான வயிற்றினுட் புழு வகை.
Tapeze
n. ஊசுதண்டு, உடற்பயிற்சிக்காக ஊசலாடும் சலாகை, விரித்த அடிப்பகுதியினையுடைய பெண்டிரின் உடைவகை.
Tapioca
n. மரவ்ளிளச் செடி, மரச்சீனி, எழிலைக் கிழங்கு.
Tapioca
n. காண்டாமிருகத் தொடர்புடைய பன்றிபோன்ற விலங்கு வகை.
Tapioca
n. மேசைத்துணி மீதிட்ட நிலை, திரைமீதான நிலை, ஆய்வுக்குரிய நிலை, சிந்திக்க வேண்டிய தன்மை.
Tapotement
n. சதைப்பிடிப்புத் துறையில் அழுத்தித் தட்டுதல் முறை.