English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Transgressional
n. மீறுகை சார்ந்த, தெய்வ ஆணை மீறுகைக்குரிய.
Transgressive
a. மீறும் இயல்புடைய தெய்வ ஆணை திறம்புதல் சார்ந்த,பழிசேர் போக்குடைய.
Transgressor
n. மீறுவோர், மாறிநடப்போர், வஜ்ம்பு கடப்போர்.
Transhumance
n. கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல்.
Transhume
v. கால்நடைகளைப் பருவகாலத்திற்கேற்ப மேய்ச்சல் நிலன்ற்றி ஓட்டிச்செல்.
Transience, transiency, n..
நிலையாமை, சிறுபோதைய நில, நிலையற்ற தன்மை, உறுதிப்பாடற்ற தன்மை, கணத்தில் மாறுபடும் நிலை, சிறுதிற இயல்பு, அறவே முக்கியத்துவமின்மை.
Transient
a. நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
Transiliency
n. தவளைப்பாய்ச்சு.
Transilient
a. தவளைப்பாய்ச்சான, தத்திச்செல்கிற.
Transillumination
n. (மரு) ஊடுறுப்பொளியூட்டம், ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல்.
Transisthmian
a. நிலச்சந்து கடந்த, நில இடுக்கிற்கு அப்பாலான.
Transistor
n. மினமப் பெருக்கி, ஆற்றற் சிக்கனமுடைய காற்றொழிப்பில்லா மின்விசைப் பெருக்கு கருவி.
Transit
n. புடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வௌளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வௌளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.
Transit-circle
n. கோட்கடப்பு வட்டக் கருவி, நுண்ணல கீடடினையுடைய கோட்கடப்பளவை வட்டக் கருவி.
Transit-duty
n. ஊடு சுங்கவரி, பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.
Transit-instrument
n. கோடட்கடப்பு மைவரைக் காட்சித் திருப்பு கருவி.
Transitional
a. புடைபெயர்வுக்குரிய, நிலைதிரிபான, இடைமாறுபாட்டுக் குரிய, இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த, இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய, இடை மாறுதல் கால மாதிரியான, இடைக்காலத்திற்குரிய, தற்காலிகத் திட்டமிட்ட, எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான, இடைநிலைச் சார்பான.
Transitionally
adv..இடைமாறதல் குறிக்கும் முறையில், இடைமாறதலாய்.
Transitive
n. செயப்படுபொருள் குன்றா வினையாக செயப்படுபொருள் குன்றா வினைப்பொருளில்.
Transitorily
adv. சின்னாள் வாழ்வுடையதாக.