English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Transfigure
v. தோற்ற மாற்று, உருமாற்று, உயர்நிலைப்படுத்து.
Transfix
v. குத்தி ஊடுருவச் செல், குத்திப் பதித்து வை, குத்தி நிற்கச் செய், விறைந்து நிற்கச் செய், ஊன்றி நிற்கச் செய்.
Transfixion
n. குத்தி ஊடுருவுகை, (அறு) அறுவையில் புடைக்குத்தீவு, உறுப்பறுவைக்கு முன் உள்ளிருந்து புறமாக இழைமங்களை அகற்றுவதற்கான பூர்வாங்கச் செயலாக உறுப்பின் குறுக்காகச் செய்யும் வரிக்குத்தீவு.
Transform
v. உருமாற்று, தோற்றம், மாற்றுவி, பண்பு மாற்றஞ் செய், அமைப்பு மாறுபாடு செய், பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று, கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு, பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி, மின்னியல் மாற்று, மின்னியல் மாறுபாடுறு, இயல்பு மாறுவி, உருமாறு, தோற்றமாறு, இயல்மாறு, கூறாக்க மாறுபாடுறு, பண்பு மாறுபாடுறு.
Transformable
a. உரு மாற்றதக்க, தோற்ற மாற்றத்தக்க, படிமாற்றதக்க, நிலைமாற்றத்தக்க.
Transformation
n. தோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
Transformed
a. உருமாற்றப்பட்ட, மாறுபடு தோற்றம் வாய்ந்த, படிமாறிய, உருத்திரிபுற்ற,.
Transformer
n. உருமாற்றுபவர், தோற்றம் மாற்றுபவர், உருமாற்றுவது, மின்னியல் விசை மாற்றமைவு.
Transformism
n. (உயி) உயிரின மலர்ச்சியிடையே இன வகைமாற்றம், (உயி) உயிரின மலர்ச்சியிடையே இனவகை மாற்றக் கோட்பாடு, (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாடு, நுண்ணுயிர்கள் கூட்மைவாகச் சேர்ந்தே உறப்பமைதியுடைய உஸ்ர் உயிரினங்கள் தோன்றுகின்றன என்றும் உயிரியற் கோட்பாடு.
Transfromative
a. உருமாற்றும் இயல்புடைய, உறுமாற்றுப் போக்குடைய, உருமாறும் பாங்குவாய்ந்த, உருமாற்றஞ் சார்ந்த.
Transfromist
n. (உயி) இனவகை மாற்றக் கோட்பாட்டாளர், (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாட்டாளர்.
Trans-frontier
a. எல்லைப்புறந் தாண்டிய, இந்தியாவில் எல்லைப்புற மாகாணங் கடந்த.
Transfuse
v. கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல, ஊடு கலக்கச் செய், ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய், பறிது குருதியூட்டு, பிறர் குருதியேற்று. ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து, குருதி நிர்மமேற்று, குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து, பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய், ஊடுபடர்வி, ஊடுருவிப் பரவச் செய், பண்பூட்டு, பண்பு படர்வி, படர்வித்துப் பண்புமயமாகச் செய்.
Transfusion
n. பிறிது குருதியேற்றம், ஊடு கலப்பு, ஊடுபடர்வு, ஊடுபடர்விழைவு, பண்புக் கலப்பிழைவு.
Transfusionism,
பிறிது குருதியற்றுப் பண்டுவ ஆதரவுக் கோட்பாடு.
Transfusionist
n. பிறிது குருதியேற்றப் பண்டுவ நம்பிக்கையாளர்.
Transfusive
a. ஊடுகலக்கும் இல்புடைய, ஊடுகலக்கும் ஆற்றலுடைய, ஊடுகலக்கச் செய்யக்கூடிய.
Trans-Gangetic
a. கங்கையாறு கடந்த.
Transgress
v. மீறு,. வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய், பழிச் செணயல் செய்.
Transgression
n. மீறு, வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய். பழச் செயல் செய்.