English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trans;irratory
a. ஆவி வௌதயிடுவதற்குரிய, ஆவி வௌதயிடுகிற.
Transact, v.
செயல் முறையாற்று, நடைமுறைப்படுத்து, தொழில் முறை வகையில் நடத்து.
Transactiojn
n. தொழில் நடைமுறை, தொழில் முறைச் செயலாட்சி, வாணிக நடவடிக்கை, தொழின் முறை நடவடிக்கை, இடைபாடு, தொழின் முறைத் தொடர்பு, (சட்) சட்ட உரிமை பாதிக்குஞ் செயல்(சட்) இருதிற விட்டுக் கொடுப்புச் சமரசம்.
Transactions
n. pl. நிலைய அறிக்கைகள், நிலைய வெறியீடுகள்.
Transactor
n. செயல் முறையாளர். நடத்துபவர், தொழின் முறை நடவடிக்கையாளர்.
Transalpine
n. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு வடக்கே வாழ்பவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அப்பாலுள்ள.
Trans-Appalachian
a. இத்தாலி நாட்டில் அபலேஷியன் மலைத்தொடர் கடந்த.
Transatlantic
a. அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பாலுள்ள.
Trans-Caucasian
a. காக்கஸஸ் மலைக்கு அப்பாலுள்ள.
Transceiver
n. வானொலி இருமைக் கருவி, ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி.
Transcend
v. எல்லை கடந்து மேம்படு, அனுபவ வரம்பு மீறு, அறிவின் பிடிக்கு அப்பாற் செல், எல்லை கட, வரம்பு மீறு.
Transcendental
n. கடந்த தத்துவம், அறிவெல்லை கடந்த கருத்து, அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம், (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த, காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட, காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த, காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான, நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட,. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வௌதப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த, புறநிலை அறிவு தாண்டிய, இயற்கை கடந்த, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவுக் கெட்டாத, அறிவெல்லை கடந்த,பொருண்மை நிலை கடந்த, கனவியலான, எல்லைமீறிக் கருத்தியலான, மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த, (பே-வ) தௌளிதிற் புலப்படாத, தௌதவற்ற, (பே-வ) புரியாத,. விளங்காத, (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Transcendentalist
n. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாட்டாளர், அனுபவங்கடந்த அறிவு மூலதத்துவ ஆராய்ச்சியாளர்.
Transcendentally
adv. எல்லை கடந்து, உச்ச நிலையில்.
Transcendently
adv. எல்லை கடந்து, உச்ச நிலையில்.
Transcontinental
a. கண்டங்கள் கடந்து செல்கிற.
Transcribe
v. பார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
Transcriber
n. பார்த்தெழுதுபவர், பார்த்துப் படி செய்பவர்.
Transcript
n. எழுத்துப்படி.
Transcription
n. படியெடுத்தல்.