English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trammel
n. மும்மடிப்பை வலை, புள்வலை, தொழுமரம், தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை, நீள்வட்ட வரை கருவி,. அகப்பைமாட்டி, இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு, சிறைக்கட்டு, தளைக்கட்டு, (வினை) தொழுமரத்தில் இடு, தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய், கொண்டிக்கட்டை மாட்டு, கால் கட்டிடு, தளையிடு, செயலிடில் தடங்கல் செய்.
Trammel-net
n. மும்மடிப் பை வலை.
Trample
n. மிதிப்பொலி, காலறைவொலி, மிதிப்பு, மிதிக்குஞ் செயல், (வினை) மிதித்துத் துவை, அறைந்து மிதி, சவட்டி நசுக்கு காலின் கீழிட்டரை, மிதித்து நட, மேலேறி மிதி, முரட்டுத்தனமாய் நட, வெறுப்புடன் நட.
Trampler
n. மிதிப்பவர், மிதித்துத் துவைப்பவர், கொடுமைப்படுத்துபவர்.
Trampling
n. மிதித்துத் துவைப்பு, மிதித்தரைப்பு, (பெயரடை) மிதித்துத் துவைக்கிற, மிதித்தரைக்கிற.
Trampolin, trampoline
n. வீழ்தடுப்புறை, கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் திண்ணுறை மெத்தை.
Tramp-pick
n. கடப்பாறை, நெம்புதுடுப்பு.
Tramroad
n. அமிழ் தண்டவாளப்பாட்டை, அமிழ் தண்டவாளப் பட்டை.
Tramsmutable
a. பொருணிலை மாறுமியல்புடைய, பொருளியல்பு மாற்றத்தக்க, உரு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, நிலை மாற்றத்தக்க.
Trancendence, terancendency
n. கடந்த நிலை, அறிவு வஜ்ம்பு கடந்த நிலை, தத்துவங் கடந்த நிலை, விஞ்சிய நிலை, மனவாசகங் கடந்தமை.
Trancendentalism
n. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாடு, அனுபவங் கடந்த அறிவின் மூல தத்துவ ஆராய்ச்சி, அனுபவச் சார்பற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, அனுபவச் சார்டபற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, மெய்விளக்கத் துறையின் தௌதவற்ற மருட்சியூட்டுங் கூறு.
Tranmute
v. படிமாற்று, பொருணிலை மாற்று, பண்பு மாற்று, தரமாற்று,
Tranquil
a. சாந்தமிக்க, நீடமைதி வாய்ந்த, வீறமைதி சான்ற, கலங்காத.
Tranquillity
n. நீடமைதி, சாந்தி, உலைவின்மை.
Tranquillization
n. அமைதியூட்டல், உலைவகற்று.
Tranquillizer
n. அமைதி செய்பவர்,நோவகற்றும் மருந்து.
Tranquillizing
a. அமைதியூட்டுகிற.
Tranquillizingly
adv. அமைதியூட்டும் முறையில்.