English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Travertin, travertine
n. பொற்படிகக் கல், இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை.
Travesty
n. நையாண்டிப்போலி, கேலிக்குரிய போலிமை நடிப்பு, இலக்கிய நையாண்டிப் புனைவு, (வினை) நையாண்டிப் போலிசெய், ஏளனப்போலி செய், போரிசெய்து நகைக்குரிய தாக்கு இலக்கிய ஏட்டினைப் போலி நையாண்டிச்செய்.
Travolator
n. தானியங்கு பாதை, நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு.
Trawl
n. பெரும் பை வலை, மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை, நீள்மிதவைத் தூண்டில், குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில், (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு, பெரும் பைலையிட்டு மீன்பிடி.
Trawl-boat
n. பெரும் பைவலைப் படகு.
Trawler
n. பெரும் பைவலை இழுப்பவர், பெரும் பைவலை இழுப்புப் படகு.
Treacherious
a. கடமையுணர்வு கொன்ற, நம்பிக்கைத் துரோகமான, வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான, பொறுப்புக் குலைவான, நட்புக்கோடான, காட்டிக்கொடுக்கிற.
Treacherously
adv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய்.
Treachery
n. நம்பிக்கைத்துரோகம், நன்றிக்கொலை, கீழறுப்பு.
Treacle
n. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு.
Treacle-mustard
n. செடிவகை.
Treacliness
n. தீம்பாகுத்தன்மை, இழுதுத்தன்மை, பசையினிப்பு.
Treacly
a. தீம்பாகு சார்ந்த., தீம்பாகு போன்ற, பசையினிப்பு வாய்ந்த.
Tread
n. மிதிப்பு, மிதிப்பொலி, நடையொலி, நடப்புப்பாங்கு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு, மிதிகட்டைத் தொய்வக உறை, மிதிகட்டைப் பொதிதகடு, நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி, புதைமிதியின் அடித்தோல், ஏறுபடிக் காலின் மிதிகட்டை, மிதிகட்டைப் பாவுதொலை, மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு, முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி, (வினை) மிதி, நட, மீதுநட, மிதித்து நட, கடைபோடு, மெல்ல நட, மேலே நட, மிதித்துத் துவை, அழுத்து, காலால் அரை, மிதித்தியக்க, மிதித்தாக்கு., கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று, மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
Tread-board
n. படி முகடு, படிக்கட்டுகளின் உச்சப்படி, ஏறுபடிக்காலின் மிதிகட்டை.
Treadle
n. இயந்திர விசை நெம்புகட்டை,. (வினை) நெம்புகட்டையை மதித்து அச்சு இயந்திரம் இயக்கு.
Treadle-machine, treadle-press
n. மிதியச்சுப் பொறி, மிதித்தியக்கும் அச்சு இயந்திரம்.
Treadler
n. மிதிபொறி இயக்குபவர், மிதியச்சுப்பொறி இயக்குபவர்.
Treadmill
n. மிதி செக்குருளை, செக்கடி வேலை.