English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thummim
n. வாய்மொழித் தாயித்து உரு, குறி சொல்வதற்குப் பயன்படும்படி யூத உயர் மதகுரு மார்ணியில் வைத்திருந்து இரு தாயித்துருக்களுள் ஒன்று.
Thump
n. பேரடி, பலத்த அடி, (வினை) மொத்து, நையப்புடை.
Thumper
n. செம்மையாக அடிப்பவர், பலமாக மொத்துவது.
Thumping
n. மொத்துதல், (பெயரடை) மிகப்பெரிய.
Thunder
n. இடியோசை, இடியேறு, பேரொளி, (வினை) இடி, இடியொலி முழக்கு, பெருமுழக்கஞ் செய், உரக்க அடித்துச் சூளுரை.
Thunder-and-lightning
n. ஒண்ணிறத் திண்சாம்பர் வண்ண ஆடை, (பெயரடை) ஒண்ணிற வண்ணங்கள் வாய்ந்த.
Thunderbolt
n. இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம்.
Thunderclap
n. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர்.
Thundercloud
n. மின்செறிமுகில், மின் இடிமேகம்.
Thunderer
-1 n. உரக்க அச்சுறுத்திப் பேசுபவர்.
Thunderer
-2 n. 'ஜுபிடர்' என்னும் பண்டை ரோமரின் பெருந்தெய்வம், (பே-வ) 'டைம்ஸ்' என்னும் செய்தித்தாள்.
Thundering
n. இடிமுழக்கம், (பெயரடை) இடி இடிக்கிற, இடி முழக்கஞ் செய்கிற, இடியோசைபோன்ற ஒலி வௌதப்படுத்துகிற, (பே-வ) வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடதக்க, தனிச் சிறப்புக்குரிய, தனிப்பட்ட, உறுதியான, தௌதவான, (வினையடை) வழக்கத்திற்கு மாறாக, குறிப்பிடத்தக்கதாக, தனிச்சிறப்புக்குரியதாக, தனிப்பட்டதாக, உறுதிப்பாடாக.
Thunderingly
adv. இடி முழக்கமாக, ஓங்கு முழக்கத்துடன், கோபாவேசத்துடன், ஆர்ப்பாட்டமாக, மிக உரத்து.
Thunder-jet
n. கொரியா நாட்டுப்போரில் வழங்கப்பெற்ற அமெரிக்க பீற்றுவிமான வகை.
Thunderless
a. இடியற்ற, இடியாத.
Thunderous
a. இடியோசை போன்ற, பேரச்சந் தருகிற.
Thunder-peal
n. இடி முழக்கம், இடியதிர்வு.
Thunders
n. pl. பெருங் கண்டனம், இடித்துரை, அச்சுறுத்தல்கள்.
Thunder-shower
n. இடிமழை.
Thunderstorm
n. இடிமின் புயல்.