English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Throve
v. 'த்ரைவ்' என்பதன் இறந்தகால வடிவம்.
Throw
n. எறிதல், வீச்சு, பகடை எறிவு, மீன்தூண்டில் எறிவு, எறிபடை எறிவு, எறிபடை எறி தொலைவு, எறிபடை வீச்செல்லை, எறிபடை செல்லக்கூடிய எல்லை, மற்போரில் வீழ்த்தடிப்பு, மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு, (மண்., சுரங்.,) பாறைமடிவு, (மண்., சுரங்,) படிக வீழ்வு, (மண்., சுரங்.,) படிகமீதடைவு, விரைசுழல் இயக்க அமைவு, விரைசுழல் இயக்கப்பொறி, (வினை) எறி, பழி வகையில் மேற்சுமத்து, பந்து எறி, மற்போரில் கீழே வீழ்த்து, குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு, ஆடையை அசட்டையாக மேலிடு, பாம்பு வகையில் தோலுரி, முஸ்ல் வகையில் குட்டிப்போடு, புறாவகையில் குஞ்சுபொரி, பகடை எறிந்தாடு, பட்டிழை முறுக்கிக்கட்டு, பானையைச் சக்கரத்தில் வனை, பார்வை வகையில் விரைந்து செலுத்து, உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு, விரைந்து நீட்டு, பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள், வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு, (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில், (இழி) விருந்து வகையில் வழங்கு.
Throw-away
n. இலவசத் துண்டுவிளம்பரம், இலவசத்துண்டுவிளம்பர ஏடு, பத்திரிகைத்துறைச் செய்தி வௌதயீடு.
Throw-back
n. மரபு மூலப் பின்னெறிவு, மூலமரபின் பண்புக்குப் பின்னிடைதல், மரபுமூலப் பின்னெறிவுச் செய்தி.
Throwing
n. எறிவு, (பெயரடை) எறிகிற.
Throwing-table
n. குயவர் சக்கரம்.
Thrown
v. 'த்ரோ' என்பதன் முடிவெச்சம்.
Thrown-out
n. வேண்டாப்பொருள் எறிவு, வேண்டாது எறிந்த பொருள்.
Thrown-silk
n. பட்டு முறுக்கிழை.
Throw-off
n. வேட்டைத்தொடக்கம், பந்தயத்தொடக்கம்.
Throwster
n. பட்டிழை முறுக்குபவர்.
Thrum
-1 n. பாவிழைத் தொங்கல் விளிம்பு, பாவு வெட்டியெடுக்கப்பட்ட பிறகு தறியிலிருக்கிற நுல் தொங்கல், பாவிழைத் தொங்கல் நுல், விடுநுல், உதிரி இழை, உதிரிஇழைக்குஞ்சம், இழைநுனிப் பகுதி, துரட்டு இழைத் துணுக்கு, கழிவுநுல், நுல் கழிவு, (வினை) கழிக்கப்பட்ட நுல்கொண்டு ஆக்க
Thrum
-2 n. திறமையற்ற யாழ்நாண்தெறிப்பு, சலிப்பூட்டும் இசை நரம்புளர்வு, தட்டுக்கொட்டுத் தாளம், சோம்பேறித் தனமான விரற்கொட்டு, தட்டுக்கொட்டுத் தாள ஒலி, இசை நாண் தெறிப்பொலி, (வினை) திறமையற்ற வகையில் இசைநாண்தெறி, சலிப்பூட்டும் வகையில் யாழ் நரம்புளர், வேலையின்றி மேசை
Thrummy
a. பாவிழைத் தொங்கலாலான, கழிவுநுல் போன்ற, தளர் தொங்கலிழை போன்ற.
Thrush
-1 n. பாடும் பறவை வகை.
Thrush
-2 n. சள்ளை நோய், குழந்தைகளுக்கு வாயிலுங் கழுத்திலும் வரும் மென்புடைப்புநோய் வகை, புரவிநோய் வகை, குதிரைக்காலடி நடுவிலுள்ள தொய்வுப் பொருளின் வீக்கம்.
Thrust
n. நெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல்.
Thrust-block
n. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு.
Thruster
n. நெக்குபவர், தள்ளுவது, உந்தித் தள்ளிக் கொண்டு செல்பவர், தலையிடுபவர், இடையே குறுக்கிடுபவா, முந்து இடக்காளர், நெருக்கியடித்துக்கொண்டு முந்துவதனால் மற்றவர்களுக்கோ வேட்டைநாய்களுக்கோ இடர் விளைக்கும் நரிவேட்டைக்காரர்.