English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Threw
v. 'த்ரூ' என்பதன் இறந்தகால வடிவம்.
Thrice
adv. மும்முறை, மூன்ற தடவை, மிக உச்ச நிலையாக.
Thrice-blessed
a. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க.
Thrice-favoured
a. உச்ச நிலையில் நல்லா தரவு பெற்றுள்ள.
Thridace
n. வலிநீக்க மருந்தாகப் பயன்படும் கோசுக்கீரை வகையின் கெட்டிச்சாறு.
Thrift
n. செட்டு, சிக்கன ஆட்சி, செல்வ ஆக்க நிலை, செல்வ வளம், செல்வ நிலை வளர்ச்சி, ஆதாய ஆக்கத்தொழில், தாவர வகை.
Thriftily
adv. சிக்கனமாய், செட்டாக, செல்வ ஆக்கத்துடன்.
Thriftiness
n. சிக்கனமுடைமை, செல்வ ஆக்கமுடைமை.
Thriftless
a. சிக்கனமற்ற, ஊழ்ரித்தனமான, உருப்படாத.
Thrifty
a. செட்டான, சிக்கன ஆட்சியுடைய, முன்னேற்றமான, செல்வ வளமுடைய, செல்வ ஆக்கந் தருகிற.
Thrill
n. சிலிர்ப்பு, புளகாங்கித உணர்ச்சி, கிளர்ச்சி அலை, நரம்புத்துடிப்பதிர்வு, (மரு) நாடி அசைவதிர்வு, (இழி) உணர்வார்வக் கதை, (வினை) சிலிர்ப்பூட்டு, புளகாங்கிதங்கொள், உவ்ர்ச்சியதிர்வலை பரப்பு, உணர்வலைக் கிளர்ச்சியுறு, நாடி நரம்புளர்வுறுத்து, துடிப்பதிர்வுறு, எழுச்சியூட்டி, கிளர்ச்சியுறுவி, கிளர்ச்சிகொள், உணர்ச்சி வகையில் அணு அணுவாகப் பரவுதலுறு, அச்சம் முதலிய உணர்ச்சிகளால் உளநடுக்குறு, உள்விதிர்விதிர்ப்புறு.
Thrill ing
a. உணர்ச்சியார்வம் ஊட்டுகிற, கிளர்ச்சியூட்டுகிற, சிலிர்ப்பூட்டுகிற, விதிர்விதிர்க்கிற.
Thriller
n. உவ்ர்ச்சியார்வமிக்க கதை, உணர்வர்வ நாடகம்.
Thrips
n. திராட்சைச் செடியரிக்கும் பூச்சி வகை.
Thrive
v. ஆக்கவளமுறு, செழித்தோங்கு.
Thriven
v. 'த்ரைவ்' என்பதன் முடிவெச்ச வடிவம்.
Thriving
a. ஆக்கமான, வளமான, முன்னேறுகிற.
Throat
n. மிடறு, தொண்டை, உணவுக்குழாய், குரல்வளை, மூச்சுக்குழல், குரல், இடுக்கமான பகுதி, ஆற்றின் பாறையிடைப்பகுதி, சிற்பப்பகுதியின் அடிப்பள்ளம், (கப்) பாய்கல இயந்திரத்தின் இடுங்கிய பகுதி, (வினை) செலுத்து, பள்ளஞ்செய், புகுத்தித் திணி.
Throatiness
n. தொண்டை கம்மிய நிலை, கரகரப்பு.
Throaty
a. தொண்டை கட்டிய, கரகரப்பான, கனத்த ஆழ்குரல் வாய்ந்த, பெருமிடறுடைய, தொண்டைச்சதைப் புடைப்புடைய, தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள, (ஒலி) மிடற்றியலான, மிடற்றில் ஒலிக்கிற.