English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tiffin
n. சிற்றுண்டி, சிற்றுணா, (வினை) சிற்றுண்டி உட்கொள்.
Tiger
n. புலி, கடுவாய், வேங்கை, (பே-வ) ஆட்டத்தில் வெல்லமுடியாத எதிரி, கொடுமைக்காரன், அடாதுடிக்குடியன், குதிரைவண்டித் துணைப் பணியாள், சிறு வண்டியில் தலைவனுடன் செல்லும் குதிரைக்காரன், வீர்ப்பொலி, பாராட்டு மூவிளிகள் தொடர்ந்த ஆர்ப்பரிப்பு, பேசாதிரு, வாய்மூடிக்கொண்டிரு.
Tiger-beetle
n. கொடிய பொறி வரிவண்டுவகை.
Tiger-cat
n. புலிவடிவ வரிப்பூனை.
Tiger-eye
n. வைடூரிய வகை, புலிக்கண்ணொத்த மணிக்கல் வகை.
Tigerish
a. புலிபோன்ற, புலிபோன்ற கொடுமை வாய்ந்த.
Tiger-lily
n. புலிநிற மலர்களையுடைய அல்லி வகை.
Tiger-moth
n. பொறிவரி விட்டில்.
Tight
a. நெருக்கமான, செறிவான, அடர்தியான, இறுக்கமான, இறுக்கப் பிடிப்புடைய, திணித்து வைக்கப்பட்ட, பிடி வகையில் அழுத்தமான, மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான, விறைப்பாயுள்ள, தளராத, தொங்கிழைவில்லாத, காற்றுப்புகாத, நீர்புக இடங்கொடாத, ஒழுகாத, இடநெருக்கடியுடைய, புழுக்கமான, அசையாத, உறுதியாகப் பற்றுகிற, கடுமையான, இக்கட்டான, கடுமுயற்சி வேண்டியுள்ள, பேருழைப்பினால் உண்டான, செப்பமிக்க தோற்றமுடைய, கட்டொழுங்கான, பணவகையில் முடையான, பெறற்கரியதான நிலையுடைய, ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய, கைக்கடிப்பான, பணஞ் சலெவிட மனமில்லாத, (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற, (வினையடை) இறுக்கமாக, நெருக்கமாக, அடர்த்தியாக, நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Tight;-fisted
a. கையிறுக்கமான, கஞ்சத்தனமுள்ள.
Tighten
v. இறுக்கு, மேலும் இறுக்கமாக்கு, இறுக்கிமுடுக்கு, அடர்த்தியாகு, விறைப்பாகு.
Tightener
n. இறுக்குபவர், இறுக்குவது,(உள்) நீட்டுந்தசை, எளிதிற் செரிக்காத உணவு.
Tightish
a. சற்றே இறுக்கமான.
Tight-lace
a. அரையிறுக்கிய, (வினை) அரையிறுக்கு, அரைக்கசை.
Tight-lacing
n. இறுக்க ஆடையால் அரை ஒடுக்குதல்.
Tight-lipped
a. வாய்விடாத, செய்தி எதுவும் கூறிவிடாது அல்க்கி வைக்கும் இயல்புடைய, பிறருல்ன் எளிதில் பேசாத.
Tightrope
n. கழைக்கூத்தாடி நடக்குங் கயிறு, வித்தை காட்டுபவர்கள் நடக்குங் கயிறு.
Tights
n. pl. கழைக்கூத்தாடிகளின் உடலிறுக்க உடைகள்,
Tightwad
n. கையிறுக்கமானவர்.