English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ticker
n. 'டிக்' ஒலி செய்யும் பொருள், (பே-வ) கைக்கடிகாரம், தந்திப் பதிவுநாடா, நெஞ்சுப்பை.
Ticket
n. பயணச்சீட்டு, நுழைவுச்சீட்டு, இசைவுச்சீட்டு, உரிமைச்சீட்டு,. விலைக்குறிப்புச்சீட்டு, (படை,இழி) பணிநீக்கம், வாடகையிட அறிவிப்பு அட்டை, கட்சி வேட்பாளர்களின் பட்டியல், கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி, சரியான செய்தி, (வினை) விலைச்சீட்டையினை, விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை, முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
Ticket-day
n. சீட்டு நாள், பங்குமாற்றுத்துறை வகையில் இரண்டு வாரத்திற்கொருமுறை கணக்குத் தீர்க்கப்படும் நாளுக்கு முந்திய நாள்.
Ticket-night
n. குறிக்கொள் காட்சியிரவு, மற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அவரவர் வரவு பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடுடைய நாடகம் நடக்கும் இரவு.
Ticket-of-leave
a. சிறைப்புற உரிமையுடைய, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய.
Ticket-porter
n. பட்டயச் சுமைக்கூலியர்.
Ticking
n. முரட்டு மெத்தை உறைத்துணி.
Tickle
n. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு, பொழுதுபோக்காக மகிழச் செய், மீன் வகையைக் கையினாற் பிடி.
Tickler
n. அக்குளுப்பவர், கூச்சமுண்டாக்குவது, திகைப்பூட்டுகிற செய்தி, நுண் கல், நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை, இறகுத்தூரிகை.
Ticklish
a. எளிதிற் கூச்சம் உண்டுபண்ணுகிற, எளிதில் அக்குளுப்புக்கு ஆளாகிற, அக்குளுப்பு வகையில் கூருணர்விடைய, அருநுட்பம் வாய்ந்த, நுட்ப நுணுக்கமான, கவனமாகக் கையாள வேண்டிய.
Tick-tack
n. நாடியடிப்பு, இருதயத்துடிப்பு.
Tick-tick
n. குழந்தை வழக்கில் கைக்கடிகாரம்.
Ticpopong
a. புள்ளி விரியன், கொடு நச்சுப் பாம்பு வகை.
Tidal
a. வேலை ஏற்ற இறக்கஞ் சார்ந்த, வேலை ஏற்ற இறக்கத்தினைப் பொறத்து உண்டான, வேலை ஏற்ற இறக்கத்தினால் இயக்கப்படுகிற, ஏற்ற இறக்கமுடைய, பொங்குதலும் வடித உடைய.
Tiddler
n. குழந்தை வழக்கில் சிறு முள்மீன் வகை.
Tiddly-winks
n. வட்டுச் சுண்டாட்டம், மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை.
Tide
n. வேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வௌளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள்.
Tidegate
n. வேலை மதகுவாய்.
Tide-lock
n. வௌளப்பூட்டமைவு.