English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Toccata
n. இசைமுடுகு வகை.
Tocharian
n. தொக்காரியம், வழக்காறற்றுப்போன இந்தோ-ஐரோப்பிய மொழி வகை, (பெயரடை) தொக்காரிய மொழி சார்ந்த.
Tocher
n. ஸ்காத்லாந்து வழக்கில் சீர்வரிசை.
Toco
n. நையப்புடைப்பு, வீக்கம், கசையடி, தண்டனை.
Tocopherol
n. ஈ, ஊட்டத்ச்சத்து வகை.
Tocsin
n. எச்சரிக்கை மணியொலி, அபாய எச்சரிக்கை.
Tod
-1 n. தழைத்தொகுதி, 2க்ஷ் பவுண்டு கம்பளி எடை, புதர்.
Today,-to-day
இன்று, இக்காலம், (வினையடை) இக்காலத்தில்.
Todd-AO
n. திரைப்பட வகையில் அமெரிக்க அப்ல் திரை முறை.
Toddle
n. தத்துநடை, (வினை) தளர்நடையிடு, சிறுதொலை செல், மெல்லச் செல், உலாச்செல்.
Toddy
n. கள், வெறிய நீர் இன்கலவைக் குடிவகை.
Todo
n. தொல்லை, அமளி, வெற்றாரவாரம்.
Tody
n. மீன்கொத்தியினப் பறவைவகை.
Toe
n. கால்விரல், கால்புதைமிதி விரற்பகுதி, காலுற விரற்பகதி, குளம்பு, குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை, (இயந்) அடிப்பகுதிமுனை, இயந்திரக் கைப்பிடியடி முனை, (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை, காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய், பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு,. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி, (இழி) பள்ளி வழக்கில் உதை, கால் விரலுன்றி நில, இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை, கால்விரலியக்கிச் செயலாற்று, கால்விரலை மேலே ஊன்று.
Toe-cap
n. புதைமிதி விரல் நுனிப்பகுதிப் புறக்கவிகைத்தோல்.
Toe-clip
n. கால்மிதிக் குவடு, மிதிவண்டியின் கால்மிதியில் காற்பெரு விரன்றும் நுனியாணி.
Toed
a. கால்விரலமைந்த, அடிமுற்பகுதி வாய்ந்த, அடிவளைமுனையமைந்த, ஆணி வகையில் இலாடத்தின் முற்பகுதியிற் சாய்வாக அறையப்பட்ட.
Toe-drop
n. கால்விரல் வாதம், கால்விரல் உயர்த்தமுடியாநிலை உண்டுபண்ணும் வாதநோய் வகை.
Toe-hold
n. பற்றிடம், ஒண்டுமிடம்.