English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Uncrowned
a. முடிசூட்டப்பெறாத, மணிமுடி இல்லாத.
Uncrystallizable
a. படிக உருப்படாத, மணி உருப்படச் செய்ய முடியாத.
Uncrystallized
a. மணியுருப்பெறாத, உருப்படியாகாத.
Unction
n. முழுக்கு, அபிடேகம், எண்ணெய் முழுக்கு, (மரு.) தைலமுழுக்கு, (மரு.) தைலப்பூச்சு, சமயத்துரைத் திருமுழுக்கு, முழுக்கெண்ணெய், முழுக்கு நெய், முழுக்குத் தைலம், முகப் புகழ்ச்சியுரை, பசப்புரை, சொல்லின் உணர்ச்சியூட்டுப் பண்பு, சொல்லின் பக்தியூட்டுப்பண்பு, பேச்சுப் பரிவு, சொற்பாசம், சமயப்பசப்பு, இறையருள், கருணை.
Unctuosity
n. குழைவு, பசப்பு, போலிப் பரிவு.
Unctuous
a. எண்ணெய்ப் பிசுக்குடைய, நெய்க்குழைவு வாய்ந்த, தைலப் பதமுடைய, நெய்மம் நிறைந்த, பாசப் பரிவு மிக்க, உணர்ச்சியார்வமிக்க, சுவையார்வங் காட்டுகிற.
Uncultivable
a. பயிரிட முடியாத, பண்படுத்தப்பட முடியாத.
Uncultivated
a. பயிரிடப்படாத, பண்படுத்தப்படாத, மேம்படுத்தப்படாத.
Uncultured
a. பண்பாடற்ற, நய நாகரிகமற்ற, நாகரிகமடையாத.
Uncumbered
a. பளுவால் தடைப்படுத்தப்படாத, கால்கட்டற்ற, வில்லங்கமற்ற.
Uncured
a. நோய் வகையில் குண்ப்படாத, நோய் குணமடையப் பெறாத, பதனிடப்படாத.
Uncurl
v. சுருள் அவிழ், முறுக்குப் பிரி.
Uncurrent
a. நடமாட்டத்தில் இல்லாத, வழக்காறற்ற.
Uncurtailed
a. வெட்டிக் குறைக்கப்படாத, குறுக்கப்படாத, உரிமையகற்றப்படாத.
Uncus
n. உறுப்பின் வளைவாக்கப் பகுதி.
Uncustomed
a. தீர்வை விதிப்புக்கு உட்பட்டிராத, தீர்வை செலுத்தியிராத, வழக்கமற்ற, பழக்கப்பட்டிராத.
Uncut
a. வெட்டப்படாத, புத்தக வகையில் விளிம்பு வெட்டி ஒழுங்கு செய்யப் பெறாத, வெட்டித் தறிக்கப் பெறாத விளிம்புகளையுடைய, (பே-வ) புத்தக வகையில் மடிப்பறுத்துத் திறக்கப்படாத, மணிக்கல் வகையில் பட்டையிடப் பெறாத.
Undamned
a. மீளாத் தண்டனைக்கு ஆட்படாத, நரகதண்டனைக்குரியதாகாத, கடும்பழிக்கு ஆளாகாத.
Undated
a. தேதியிடப்பெறாத.
Undaunted
a. நடுக்கமற்ற, அஞ்சிப் பின்வாங்காத, உறுதிதளராத.