English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unit
n. ஒன்ற, ஒருமம், ஒருவர், தனி ஒருவர், தொகதியுள் ஒருவர், அலகு, மூல அலகு, எண்ணலகு அடிப்படை, அலகடிப்படை அளவு, தொகுதியுள் தனி ஒன்ற, கணிப்பு அடிப்படைக்கூறு.
Unitarian
-1 n. தனியொருமைக்கோட்பாட்டாளர், கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Unitarian
-2 n. தனியொருமைவாதி, அரசியல்துறையில் ஒரு தனிமை அரசுக்கோட்பாட்டை ஆதரிப்பவர், மைய வலிமைக்கோட்பாட்டாளர், கூட்டரசில் மைய ஆட்சி வலிமையினை ஆதரிப்பவர், (பெ.) ஒருதனியான, ஒருமைப்பட்ட, ஒருநிலை உடைய, (கண.) ஒன்றலகு வாயிலான.
Unitarianism
n. இறை வகையில் தனி ஒருமைக் கோட்பாடு.
Unitary
a. அலகு சார்ந்த, அலகுகள் பற்றிய, தனி முழுமையான, தனியொன்றான, ஒற்றுமை வாய்ந்த, ஒருசீர்மை கொண்ட, முழுமையான, பின்னப்படாத, ஒன்றன் அடிப்படையான, (கண.) ஒன்றுடான, ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற.
Unite
v. ஒன்றாக்கு, கூட்டி இணைவி, ஒன்றாகச் சேர்த்திணை, கூட்டிணைப்பாக்கு, ஒற்றுமைப்படுத்து, ஒத்துழை, ஒருங்குகூடு, ஒன்றாகச் சேர், கூடி இணைவுறு, ஒன்றாகு, ஒன்றபடு, ஒன்றாயிழை.
United
a. ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, ஒற்றுமைப்பட்ட, ஒன்றபட்ட, ஒருங்குகூடிய, கூடியிணைந்த, கூட்டிணைவான.
Unitism
n. ஒருமைவாதம், ஏகவாதம்.
Unitize
v. தனியொன்றாகக் கணி, தனிமமாகக் கொள்.
Unity
n. ஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
Univalence, univalency
n. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
Univalent
a. (வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
Univalve
n. ஒற்றைச் சிப்பி நத்தை வகை, (பெ.) நத்தை வகையில் ஒற்றைச் சிப்பிகொண்ட.
Univalvular
a. ஒற்றைச் சிப்பினையுடைய.
Univariant
a. ஒரு சிறுபுடைய இயக்கத் தன்னாண்மையே உடைய.
Universal
n. (மெய்.) அகல் பொதுவிரி, இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம், (அள.) முழுவிரி வாசகம், கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம், (பெ.) இயற்கை முழுதளாவிய, இயல் உலகளாவிய, முழு மொத்த விரிவுடைய, உலக முழுதளாவிய, இன முழுதளாவிய, முழுநிறை பொருளகற்சிவாய்ந்த, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள, உலக முழுதேற்புடைய, எங்கும் நடைபெறுகிற, எல்லாராலும் செய்யப்படுகிற, எல்லாக் காலத்திற்கும் உரிய, எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Universalism
n. மா மன்னுய்திக் கோட்பாடு, மனித இன முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கிறித்தவ சமயப் பிரிவினரின் கோட்பாடு.
Universalist
a. மா மன்னுய்தியர், மனித இனம் முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கோட்பாடுடைய கிறித்தவ சமயப்பிரிவின் உறுப்பினர்.
Universality
n. வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு.