English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Universalize
v. முழுதகல் விரிவுபடுத்து, பன்முக அகற்சிப்படுத்து, இயலுலகளாவுவி, உலகளாவுவி, இனமளாவுவி, முழுநிலை நிலவரப் பண்பாக்கு, (அள.) இனச்சுட்டு முழுதளாவுவி, பொருள்சுட்டு முழுவிரிவளாவுவி.
Universe
n. இயலுலகு, பிரபஞ்சம், படைப்பு முழுமை, உலக முழுமை, மனித இன முழுமை, (அள.) சுட்டு முழுமை, குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி.
Universitarian
n. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பல்கலைக்கழகத்திற்குரிய, பல்கலைக்கழகத் தனியுரிமையான.
University
n. பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்பினர் தொகுதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு.
Universology
n. படைப்பாய்வு நுல், மன்னல ஆய்வு நுல்.
Univocal
a. தனிஅலகுச் சொல், ஒரு பொருள் ஒருசொல்.
Unjaded
a. சோர்வுறுத்தப் பெறாத, இளைத்துவிடாத.
Unjustifiable
a. நேர்மையென, நிலைநாட்ட முடியாத.
Unjustified
a. நேர்மையற்ற.
Unkempt
a. பம்பை பறட்டையான, தலைசீவாத, தலைமுடிவாரப்படாத, ஒழுங்கற்ற.
Unkenned, unkent
(பழ.) தெரியவாராத, தெரியாத.
Unkind
a. இரக்கமற்ற, அன்பில்லாத, கடுகடுப்பான, இனிமையற்ற.
Unkindled
a. கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத.
Unkindliness
n. பாசமின்மை, அன்பின்மை.
Unkindly
a. இயற்கைக்கு மாறான, இரக்கமற்ற, (வினையடை.) இரக்கமின்றி, கொடுமையாக.
Unkindness
n. இரக்கமின்மை.
Unking
v. அரசபதவி இழக்கச் செய், அரசர் இல்லாமற் செய்.
Unkingly
a. அரசருக்கு ஒவ்வாத.
Unkknown
n. இன்னாரென்று தெரியாத ஆள், இத்துணையென்று தெரியாத அளவு, இன்னதென்று தெரியாத ஒன்று, (பெ.) முன் தெரிந்திராத, (வினையடை.) முன் தெரியாமல்.