English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unsteel
v. இளகச் செய், தளர்த்து.
Unstep
v. கப்பற் பாய்மரத்தை அதற்குரிய இடத்தினின்றும் அகற்று.
Unstercorated
a. உரமிடப்படாத.
Unsterilized
a. பொலிவழிக்கப்படாத, வீரியமகற்றப் படாத, மைம்மைப்படுத்தப்படாத, மலடாக்கப்பெறாத, வளஆற்றல் அழிக்கப்படாத, நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத.
Unstick
v. ஒட்டு நெகிழ்வி, ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளினின்றும் பிரித்தெடு.
Unstifled
a. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத.
Unstigmatized
a. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத.
Unstilled
a. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத.
Unstimulated
a. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத.
Unstinted
a. தடங்கலற்ற, தாராளமான.
Unstock
v. கையிருப்பு இழக்கச்செய், கையிருப்பினின்றும் எடுத்துவிடு.
Unstocked
a. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத.
Unstopper
v. அடைப்பை எடுத்துவிடு.
Unstored
a. குவித்து வைக்கப்படாத, சரக்குக் கையிருப்பு இல்லாத.
Unstow
v. ஒதுக்கி வைத்த குவையிலிருந்து எடு, பதுக்கி வைத்ததை எடு, வெறுமையாக்கு, சேமிப்பை எடுத்துவிடு.
Unstrained
a. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
Unstratifeid
a. (மண்.) அடுக்கமைவு பெற்றிராத, அடையடையாய் இராத.
Unstressed
a. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டுமீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
Unstring
v. இழையகற்று, கட்டவிழ், பூட்டவிழ், முறுக்கவிழ், யாழ் நரம்புகளைத் தளர்த்து.
Unstringed
a. கயிறிடப்பெறாத, இழையற்ற, சரட்டிழை இடப்பெறாத, தந்தி பொருத்தப்பெறாத.