English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Venture
n. துணிகர முயற்சி, இடர்பாடுடைய பணி, ஆபத்துக்குட்பட்ட செயல், இடர்த் துணிவுக்குரிய செய்தி, வாணிகச் சூதாட்ட வேட்டை, இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு, (வி.) துணி, முயற்சி துணிந்திறங்கு, துணிவுவினை மேற்கொள், தீரமாகச் செயல்செய், துணிந்து செயல் செய், அஞ்சாது ஈடுபடு, இடர் எதிர்த்து முனை, இடர்ப் பொறுப்பேற்கத் துணி, முன்னிலைப்படுத்த முனைவுகொள், துணிந்து வழங்க முன்வா, துணிவு வினையில் ஈடுபடுத்து, இடருக்கு ஆட்படுத்து, கருத்துத் துணிவு மேற்கொள், கூறத்துணி, துணிந்து கூறு.
Venturer
n. (வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர், இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர்.
Venturesome
a. துணிவுள்ள, அச்சமற்ற, ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய.
Venue
n. (சட்.) நிலைக்களம், வழங்குகளம், வழக்கு விசாரணைக்களம், (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு, முறைகாணாயத்தார் தேர்வுக்களம், குற்ற நிகழ்வுக் குறிப்பிடம், செயற் குறிப்புக்களம், செயற்களம், கதை நிகழ்ச்சி நிலைக்களம், பாய்வடி, சிலம்ப வகையில் பாய்வு குத்து, சிலம்ப நல்வாய்ப்பு அடி, போட்டிப் பந்தய ஆட்டம், ஆட்டச் சந்திப்பிடம், (பே-வ.) சந்திப்பிடம், ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம்.
Venus
n. காதல் இறைவி, பண்டை ரோமரின் புராண மரபில் காதலுக்குரிய பெண்தெய்வம், வௌஷீக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள், பாலிணைவின்பம், பாலெழுச்சி, இணைவிழைச்சார்வம், காதலாட்சி, காதலார்வம், காதல் விருப்பம், அழகி, அழகாரணங்கு, இரசவேதித் துறையில் செம்பு, சிப்பியினம், (அரு.) அழகுநயக் கவர்ச்சி.
Venusian
n. வௌஷீக்கோள்வாணர், (பெ.) வௌஷீக்கோளுக்குரிய.
Vera
n. தொலைக்காட்சிப் பதிவுக்கருவி, தொலைக்காட்சியின் காட்சிப்படத்துடன் ஒலியையும் உடனடியாகப் பதிவு செய்து காட்சிக்கு உதவும் பதிவுருளைக் கருவி.
Veracious
a. வாய்மையுடைய, உண்மையே பேசுகிற, உண்மையே உரைக்க முற்படுகிற.
Veracity
n. வாய்மை, மெய்வழாமை, வாய்மைநிலை, செய்தியின் மெய்ம்மைத்தன்மை, சொல்லின் மெய்ம்மைப்பண்பு, மெய்யுரை விருப்பம், மெய்ம்மையார்வம், வாய்மையுடைமை.
Veracularization
n. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம்.
Veranda, verandah
தாழ்வாரம், ஒட்டுத்திண்ணை.
Veratrate
n. வாத நோவுக்கான நச்சுமருந்து வகை.
Veratric
a. விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த.
Veratrin, veratrine
விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச்சத்து.
Veratrum
n. கிழங்குவகைச் செடி.
Verb
n. (இலக்.) வினை, வினைச்சொல்.
Verbal
n. தொஸீற்பெயர், (பெ.) சொல் சார்ந்த, சொற்குறித்த, சொல் வடிவான, சொல்மயமான, வாய்மொஸீயான, மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான, சொல் மட்டிலுமே குறித்த, கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள, (இலக்.) வினை சார்ந்த, வினைத்திரிபான.
Verbalism
n. சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு.
Verbalist
n. வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர்.
Verbality
n. வெறுஞ் சொல்லாட்சி, வெற்றெனத் தொடுப்பு.