English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Verbalize
v. பெயர் முதலியவற்றை வினையாக்கு, மிகுசொல் வழங்கு, மிகுசொல்லாட்சி பயில்.
Verbally
adv. சொற்சார்பாய், சொல் வகையில்.
Verbarian
n. புதுச்சொல்லாக்குபவர்.
Verbatim
a. சொல்லுக்குச் சொல்லான, சொற்படியான, சொற் பிறழாத, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக, சொற்படியாக, சொற் பிறழாது.
Verbation
n. வெறுஞ் சொல்லார்ப்பு.
Verbena
n. மணத்தைலத்திற்குப் பயன்படுத்தப் பெறும் மருந்துப்பூண்டு வகை.
Verbiage
n. மிகுசொல் வழங்கீடு, தேவையற்ற வெறுஞ் சொல்மயமான தன்மை.
Verbicide
n. சொற் கொலை, சொற்கொலைஞர்.
Verbify
v. பெயர்ச்சொல் முதலியவற்றை வினையாக்கு.
Verbigerate
v. அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய்.
Verbigeration
n. கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு.
Verbose
a. வெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான.
Verboseness, verbosity
மிகு சொற் புணர்ப்பு.
Verdancy
n. பசுமை, பசும்புல்லார்வு, பசுந்தழையார்வு.
Verdant
a. பசுமையான, பச்சைப் பசேரென்றிருக்கிற, பசும்புல்லார்ந்த, ஆள் வகையில் கரவற்ற, வௌளை உள்ளமான, சூதுவாது தெரியாத.
Verd-antique
n. பாமணிக்கல், பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை, பாமணிக் கல், கட்டுமான ஒப்பனைக் கல்வகை, பாசடைவு, பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு.
Verderer, verderor
கானாட்சியாளர், அரசாங்கக் காடுகஷீன் சட்ட ஆணையாளர்.
Verdict
n. முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம்.
Verdigris
n. தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை.
Verditer
n. செம்புக்கலவையிலிருந்து கிடைக்கும் வண்ணப்பொருள் வகை.