English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Videlicet
adv. (ல.) (வினையடை) அதாவது, அஃது என்னவெனில், அவையாவன.
Video
n. அமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி, (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய.
Video
வாரொஷீயங்கள், வாரொஷீயம், ஒஷீக்காட்சி க்ஷீ காணொலி
Video-cassette
ஒஷீப்பேழை க்ஷீ காணொலிப்பேழை
Videologist
n. தொலைக்காட்சிப் பேரார்வலர்.
Vidette
n. முந்தெல்லை அரண் காவலர்.
Vidimus
n. (ல.) கணக்கு மேற்பார்வை, ஆவணச் சுருக்கக் குறிப்பு.
Vie
v. (ல.) மேம்படப் போட்டியிடு, போட்டியில் வென்று மேம்பட முயற்சி செய்.
Viennese
n. வியன்னா நகரக் குடிவாணர், (பெ.) வியன்னா நகரஞ் சார்ந்த, வியன்னா நகரிலுள்ள.
View
n. நோக்கு, காட்சி, பார்வை, சுற்றுப்பார்வை, காட்சியெல்லை, பொதுக்காட்சி, இயற்கைக்காட்சி, உருக்காட்சி, தோற்றரவு, தோற்றம், தோன்றுதிறம், பார்வைக்கோணம், தோற்றக்கோணம், கருத்து, கருத்து நோட்டம், கவனம், கருத்துச் சார்பு, கருத்துச் சாய்வு, கருத்துப் பாங்கு, கருத்துச் சாயல், கருத்துக்கோணம், கொள்கை, கோட்பாடு, எண்ணம், உட்கருத்து, உள்நோக்கம், காரணம், நோக்கம், அவா நோக்கு, எதிர்நோக்கு, எதிர்காலம் பற்றிய கருத்து, காரியம், செயல்நோக்கம், (சட்.) பார்வையீடு, மேற்பார்வை, கண்காணிப்பு நோக்கு, சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி, (வி.) காண், நோக்கு, பார், சுற்றிக் காண், கவனி, கருது, எண்ணு, எண்ணிப்பார், கருத்துக் கொள், கண்டு முடிவுசெய், கண்டு மதிப்பிடு, உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய், சீர்தூக்கி ஆராய், உள்ளத்தில் திட்டமிட்டுக் காண், தொலைக்காட்சியில் காண், பார்வையிடு, கண்காணிப்பு நோக்குச் செலுத்து.
Viewable
a. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.
Viewer
n. தொலைக்காட்சியாளர், தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
View-finder
n. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி.
Viewhalloo
n. புறப்பாட்டுக் கூவிஷீ, நரி மறைவினின்றும் வெஷீப்படுவதைக் காணும் வேட்டையாளரின் கூவொலி.
Viewless
a. புலப்படாத, காட்சிக்குட்படாத.
Viewly
a. (பே-வ.) காட்சிக்கு இனிய.
Viewpoint
n. காட்சிக்கோணம், கருத்துக்கோணம்.
Viewy
a. (பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய, விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட, வெறிப்போக்குடைய, தனிவெறிப் பாங்கான.
Vigil
n. விஸீப்பு நிலை, இரா விஸீப்பு.