English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Weft
-2 n. (கப்.) துயர்க்கொடி அடையாளம்.
Weftage
n. நெசவின் தன்மை, இழைநயம், தரம், அமைப்பு.
Wehrmacht
n. காவற்படை, செர்மன் ஆயுதப் படைகள்.
Weigh
n. நிறுப்புமானம், ஒரு தடவை நிறுத்தல், நிறுப்புவேளை, நிறுப்புநேரம், (வினை.) நிறு, நிறுத்து எடை காண், கையில் எடுத்து எடை மதிப்பிடு, தூக்கி மதிப்பிடு, குறிப்பிட்ட அளவு நிறுத்தெடு, குறிப்பிட்ட எடை உடையதாயிரு, சீர்தூக்கு, பளுவுடையதாயிரு, செல்வாக்குப் பெற்றிரு, அழுத்து, பளுவினால் வளையச்செய், திறமையால் பணியச் செய், நீரடியினின்றுந் தூக்கு.
Weighable
a. நிறுக்கத்தக்க.
Weighage
n. நிறுப்புக்கூலி.
Weigh-board
n. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை.
Weighbridge
n. பார எடைப்பொறி, பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம்.
Weighed
a. நிறுக்கப்பட்ட, அனுபவம் மிக்க.
Weigher
n. நிறுத்தல் அதிகாரி.
Weigh-house
n. நிறுவை மனை.
Weigh-lock
n. எடைமான அடைப்புத்தளம்.
Weight
n. பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.
Weightiness
n. பாரமுடைமை, முக்கியத்துவம்.
Weightless
a. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற.
Weighty
a. கனமான, அழுத்துகிற, கடுஞ்சுவையான, முக்கியமான, கவனித்துச் செய்யவேண்டிய, நக்கு கவனிக்கப்படத்தக்க, உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த, செல்வாக்குமிக்க.
Weird
n. விதி, போகூழ், சூனியக்காரி, கெடுவேளை, ஊழ்த்திறக்கதை, மந்திரமாய், (பெ.) ஊழ் சார்ந்த, மாயமான, அருந்திறல் வாய்ந்த, (பே-வ) விசித்திரமான, தனிப்புதிரான.