Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொள்ளிடம் | koḷḷiṭam, n. perh. கொள்-+ இடம். The Coleroon, a branch of the Kāvēri; காவிரியினின்று பிரியும் ஒருநதி. குங்குமங்களுந்திவருங் கொள்ளிடத்தின் (தேவா. 210, 6). |
| கொள்ளித்தேள் | koḷḷi-t-tēḷ, n. <>கொள்ளி +. A kind of scorlpion causing intense pain by its sting; கடுமையாகக் கொட்டுந் தேள்வகை. வெங்கொள்ளித் தேள்போன்ற வினை (அருட்ப, ii, எழுத்தறி. 28). |
| கொள்ளிபெறு - தல் | koḷḷi-peṟu-, v. intr. <>id. +. To take fire from a temple for lighting the funeral pyre of a dancing-girl in temple service; இறந்த தேவதாசியின் தகனத்திற்காகக் கோயிலினின்று நெருப்புப்பெறுதல். கொள்ளிபெற்றவர்களாயிருக்கிற எம்பெருமானடியாளுக்கு (கோயிலொ. 94). |
| கொள்ளிமண்டிலம் | koḷḷi-maṇṭilam, n. <>id. +. See கொள்ளிவட்டம். கொள்ளிமண்டிலம் போல் . . . திரிந்திடுவ (சீவக. 1771). . |
| கொள்ளிமாலை | koḷḷi-mālai, n. <>id. +. Wreath of flowers laid upon a corpse; பிணத்திற்கு அணியும் மாலை. கொள்ளிமாலையுங் கொடிபடு கூறையும் (மணி. 6, 94, உரை). |
| கொள்ளியம் | koḷḷiyam, n. 1. Marsh-samphire. See உமரி. (மலை.) 2. Indian beech. See |
| கொள்ளியெறும்பு | koḷḷi-y-eṟumpu, n. <>கொள்ளி+. A species of small ant causing intense pain by its bite; கடியால் மிக்க கடுப்பை உண்டாக்கும் சிற்றெறும்புவகை. Colloq. |
| கொள்ளிவட்டம் | koḷḷi-vaṭṭam, n. <>id. +. Imaginary circle in the air caused by swinging round a firebrand; கொள்ளியைச் சுழற்று தலிற்றோன்றும் வட்டவடிவு. கறங்கோலை கொள்ளி வட்டம் (திருமந். 2313). |
| கொள்ளிவாய்க்குணங்கு | koḷḷi-vāy-k-kuṇaṅku, n. <>id. +. See கொள்ளிவாய்ப்பிசாசு. கொள்ளிவாய்க்குணங் குள்ளுதோ றிவறிய (கல்லா. 95, 11). . |
| கொள்ளிவாய்ச்சர்ப்பம் | koḷḷi-vāy-c-cāp-pam, n. <>id. +. See கொள்ளிவிரியன். (W.) . |
| கொள்ளிவாய்ப்பிசாசு | koḷḷi-vāy-p-picācu, n. <>id.+. Jack-o'-lantern, Ignis fatuus; வாயில் நெருப்புடையதாகக் கருதப்பதும் பேய் வகை. |
| கொள்ளிவாய்ப்பேய் | koḷḷi-vāy-p-pēy, n. <>id. +. See கொள்ளிவாய்ப்பிசாசு. கொள்ளிவாய்ப் பேய் காக்குங் கோபுரமும் (கலிங். 90). . |
| கொள்ளிவாயெறும்பு | koḷḷi-vāy-eṟumpu, n. <>id. +. See கொள்ளியெறும்பு. (W.) . |
| கொள்ளிவாலி | koḷḷi-vāli, n. <>id. +. Cow or dog with dark body and white tail; கறுப்புடலும் வெள்ளைவாலுமுள்ள பசு அல்லது நாய். (J.) |
| கொள்ளிவிரியன் | koḷḷi-viriyaṉ, n. <>id. +. Russell's viper, Vipera russellii; விரியன் பாம்புவகை. |
| கொள்ளிவீங்கு | koḷḷi-vīṅku, n. perh. id. +. Malignant sore throat of cattle; மாட்டுக்கு வரும் தொண்டைநோய் வகை. (M. Cm. D. [1887] 248.0 |
| கொள்ளிவை - த்தல் | koḷḷi-vai-, v. intr. <>id.+. 1. To set fire to; நெருப்புவைத்தல். 2. To light the funeral pyre; to perform obsequires; 3. To injure a person, ruin a family; 4. To kindle strife; |
| கொள்ளு | koḷḷu, n. [M. koḷḷu.] See கொள். . |
| கொள்ளுக்காய்வேளை | koḷḷu-k-kāy-vēḷai, n. Purple wild indigo, s.sh., Tephrosia purpurea; செடிவகை. (L.) |
| கொள்ளுநர் | koḷḷunā, n. <>கொள்-. 1. Buyers; கொள்வோர். 2. Learners; |
| கொள்ளுப்பாட்டன் | koḷḷu-p-pāṭṭaṉ, n. perh. கோ3 +. கொப்பாட்டன். Great-grandfather; பாட்டனுக்குத் தந்தை. |
| கொள்ளுப்பேரன் | koḷḷu-p-pēraṉ, n. perh. id. +. Great-grandson; பேரன்மகன். |
| கொள்ளெனல் | koḷ-ḷ-eṉal, n. 1. Onom. expr. signifying the sound of a drum or other musical instruments; பறை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62). 2. Expr. signifying abundance, plenty; |
| கொள்ளை | koḷḷai, n. <>கொள்-. 1. [T. kolla, K. koḷḷe, M. koḷḷa.] சூறைகொள்ளுகை. 2. [T. kolla.] Excess, abundance, copiousness, plenty; 3. Crowd, throng; 4. Plague, pestilence, 5. Plague, pestilence, epidemic; 6. Price; 7. Use, profit; |
