Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோடிகாண்பி - த்தல் | kōṭi-kāṇpi-, v. intr. <>கோடி3+. To hint at slightly; குறிப்புக் காட்டுதல். Colloq. |
| கோடிசீமான் | kōṭi-cīmāṉ, n. <>id. +. Multi-millionaire; பெருஞ்செல்வன். |
| கோடித்தரை | kōṭi-t-tarai, n. <>கோடி1+. Land newly converted and made fit for cultivation; விளைநிலமாகப் புதிதாய் வெட்டித்திருத்தப் பட்ட பூமி. (யாழ். அக.) |
| கோடிதீர்த்தம் | kōṭi-tīrttam, n. <>கோடி3 +. Sacred sea-bathing ghat at Dhanuṣkōṭi, Calimere, etc.; தனுஷ்கோடி முதலிய கோடிக்கரை. (சேதுபு. கோடி.1.) |
| கோடிதூங்கி | kōṭi-tūṅki, n. <>கோடிதூங்கு-. Loiterer, one who hangs about other's houses; வேலையில்லாது சோம்பித்திரிபவ-ன்-ள். (J.) |
| கோடிதூங்கு - தல் | kōṭi-tūṅku-, v. intr. <>கோடி3+. Lit., to sleep in a corner. To loiter about; [மூலையில் உறங்குதல்] சோம்பித்திரிதல். (J.) |
| கோடிப்பருவம் | kōṭi-p-paruvam, n. <>கோடி1 +. [T. kōdeparuvamu.] Youth; இளமைப் பருவம் (யாழ். அக.) |
| கோடிப்பாம்பு | kōṭi-p-pāmpu, n. <>id. + [T. kōdepāmu.] Wild or untamed young cobra; பழக்கப்படாத நாகம். வெட்டவெளியிலே கோடிப்பாம் பாடுமோ (குற்றா. குற. 124, 31). |
| கோடிப்பாலை | kōṭi-p-pālai, n. See கொதிப்பாலை. (சிலப். 3, 171, கீழ்க்குறிப்பு.) . |
| கோடிபோடு - தல் | kōṭi-pōṭu-, v. intr. <>கோடி1 +. To offer a new cloth to a widow in mourning; புருஷன் இறந்தவுடன் விதவைக்கு உற்றார் புதுப்புடைவை யிடுதல். Loc. |
| கோடிமுடி - தல் | kōṭi-muṭi-, v. intr. <>id. +. To tie a piece of money in the new cloth as of a bridegroom to oblige him to give an invitation to a feast; தன்னை விருந்திற்கு அழைக்கும் படி மணமகன் முதலியோருடைய புதிய ஆடையில் பணம் முடிதல். (J.) |
| கோடிமுரி - தல் | kōṭi-murital, n. <>கோடி3 +. A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) |
| கோடியர் 1 | kōṭiyar, n. prob. கோடு2. Professional dancers; கூத்தர். கொடும்பறைக் கோடியர் (மதுரைக். 523). |
| கோடியர் 2 | kōṭiyar, n. <>கோடி3. Those who carry a palanquin at its tow ends; சிவிகையின் முன்பினமுனைகளைத் தாங்கிச் செல்வோர் (யாழ். அக.) |
| கோடியலூர்தி | kōṭiyal-ūrti, n. <>கோடு2 +இயல்+ஊர்தி. Vehicle or conveyance made of elephant's tusks; யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம். கோடிய லூர்தியுங் கொண்டு விசியுறுத்து (பெருங். உஞ்சைக். 37, 219). |
| கோடியன் | kōṭiyaṉ, n. <>கோடி3. Bearer of palanquins or vākaṉam of an idol; பல்லக்கு அல்லது வாகனஞ் சுமப்போன். Loc. |
| கோடியில்லாமை | kōṭi-y-illāmai, n. <>id. +. A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.) |
| கோடியுடம்பு | kōṭi-y-uṭampu, n. prob. கோடி1 +. Tender body; மெல்லிய உடம்பு. (J.) |
| கோடியோடு - தல் | kōṭi-y-ōṭu-, v. intr. <>கோடி3 +. To overflow, as surplus water in a tank; ஏரி நீர்நிரம்பி வழிதல். (C. G.) |
| கோடிரவம் | kōṭiravam, n. Square spurge. See சதுரக்களி. (மலை.) |
| கோடிலம் | kōṭilam, n. cf. kākala. Put-chock. See கோட்டம். (மலை.) |
| கோடிவயது | kōṭi-vayatu, n. <>கோடி1 +. See கோடிப்பருவம். (யாழ். அக.) . |
| கோடிவெள்ளை | kōṭi-veḷḷai, n. <>id.+. First wash of new clothes; புதிய ஆடையின் முதல் வெள்ளை. |
| கோடீகரி - த்தல் | kōṭīkari-, 11. v. tr. <>krōdīkāra. To sum up in order, systematise and summarise; தொகுத்துச் சொல்லுதல். |
| கோடீசுவரன் | kōṭīcuvaraṉ, n. <>kōṭi + īšvara. Wealthy man, as lord of crores; பெரும் பணக்காரன். |
| கோடீரம் | kōṭīram, n. <>kōṭīra. 1. Crest, diadem; முடி. (W.) 2. Long matted hair, as of ascetics; |
| கோடு 1 - தல் | kōṭu-, 5 v. intr. cf. kuṭ. 1. [M. kōṭu.] To bend, to be crooked; வளைதல். செங்கோல் கோடியோ (மணி. 28, 188); 2. To go astray, deviate; 3. To be partial, biassed; 4. To be displeased, dissatisfied; to take umbrage; to have dislike or aversion; |
