Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோரைகிண்டி | kōrai-kiṇṭi, n. <>id. + கிண்டு-. See கோரையுள்ளான். . |
| கோரைகுத்தி | kōrai-kutti, n. <>id.+. See கோரையுள்ளான். . |
| கோரைச்சம்பா | kōrai-c-campā, n. <>id. + Rush-paddy; சம்பாநெல்வகை. (பதார்த்த. 811.) |
| கோரைப்பாசி | kōrai-p-pāci, n. <>id. +. A species of moss, Sida humilis; பாசிவகை. |
| கோரைப்பாய் | kōrai-p-pāy, n.<>id. +. Grass mat, bulrush mat; கோரைப்புல்லாற் பின்னப்பட்ட பாய். Colloq. |
| கோரையுள்ளான் | kōrai-y-uḷḷāṉ, n. <>id. +. Snipe, Gallinago gallinaria; உள்ளான் பறவைவகை. (பதார்த்த. 885.) |
| கோரைவெட்டி | kōrai-veṭṭi, n. <>id.+ வெட்டு-. See கோரையுள்ளான் . |
| கோரோசனம் | kōrōcaṉam, n. See கோரோசனை. . |
| கோரோசனை | kōrōcaṉai, n. <>gō-rōcanā. Bezoar taken from the stomach of cows; பசுவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள வாசனைப்பண்டம். (பதார்த்த. 1085.) |
| கோல் 1 | kōl, n. prob. கோலு-. [T. kōla, K. M. kōl, Tu. kōlu.] 1. Rod, stick; கம்பு. அலைக்கொரு கோறா (கலித். 82). 2. Branch; 3. Staff; 4. Sceptre; 5. Measuring rod; 6. Brush, pencil, as for painting; 7. Staff or stamp for marking; 8. Stick used for churning the flint stone to produce fire; 9. Rattan, cane; 10. Horse-whip; 11. Ploughshare; 12. Arrow; 13. Spear; 14. Handle, as of an umbrella; 15. Lute-string; 16. Balance on the principle of a steel-yard, beam of scales; 17. Libra of the zodiac; 18. The month aippaci; 19. Government, rule; 20. Exquisite workmanship; 21. Roundness, rotundity; |
| கோல் 2 | kōl, n. <>kōla. 1. Jujube tree. See இலந்தை (சூடா.) 2. Raft, float; |
| கோல்கொடு - த்தல் | kōl-koṭu-, v. intr. <>கோல்1+. To lead the blind with a staff; கோலாற் குருடனை நடத்திவருதல். (W.) |
| கோல்கொள்(ளு) - தல் | kōl-koḷ-, v. intr. <>id. +. To drive, as a car drawn by horses, with a whip in hand; தேர்முதலியன செலுத்துதல். கொள்வார் கோல்கொள்ளக் கொடித்திண்டே ரேற்வோர் (பரிபா.11, 51). |
| கோல்மட்டம் | kōl-maṭṭam, n. <>id.+. Staff-height, as a standard; கோலளவு. |
| கோல்மரம் | kōl-maram, n. <>id. +. Pole of a cart; வண்டியின் ஏர்க்கால்மரம். |
| கோல்வலி - த்தல் | kōl-vali-, v. intr. <>id.+ To propel boat with oars; தண்டால் ஓடந்தள்ளுதல். |
| கோல்வள்ளம் | kōl-vaḷḷam, n. <>id. +. A cup with ornamental brim; விளிம்பு பிரம்பு கட்டின வட்டில். மணிக்கோல் வள்ளத்தவ னேந்த (சீவக. 2700). |
| கோல்விழுக்காடு | kōl-viḻukkāṭu, n. <>id.+. Chance, accident; தற்செயல். கோல்விழுக் காட்டாலே பரிகாரமாயிருக்கையன்றிக்கே (ஈடு, 4, 10, 5). |
| கோலக்கல் | kōla-k-kal, n. <>கோலம்1+. A kind of white stone powdered and used for drawing decorative figures on the floor; கோலப் பொடியாக இடித்தற்குரிய கல். |
| கோலக்காரன் | kōla-k-kāraṉ, n. <>id.+. Humorist, jester; கேலிக்காரன். Loc. |
| கோலகப்பை | kōl-akappai, n. <>கோல்1+. Ladle with a long handle, as used in the preparation of large quantities of rice and curry; நீண்டகாம்பையுடைய அகப்பை. Loc. |
| கோலகம் | kōlakam, n. prob. kōlikā. Long-pepper. See திப்பலி. (மலை.) |
| கோலங்கட்டு - தல் | kōlaṅ-kaṭṭu-, v. intr. <>கோலம்1+. To put on dress as an actor, dress up for theatricals; to put on a mask or costume; நாடகம் முதலியவற்றிற்கு வேடம் பூணுதல். (J.) |
| கோலங்காட்டு - தல் | kōlaṅ-kāṭṭu-, v. intr. <>id.+. To conduct the bridegroom and the bride to the marriage dais; வதூவரர்களை மணப்பந்தர்க்கு அழைத்துக்கொண்டு வருதல். Loc. |
