Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோயிற்பிரதிஷ்டை | kōyiṟ-piratiṣṭai, n. <>id. +. 1. Consecration of a temple causing the deity to take up its abode in the idol; கும்பாபிஷேகம். 2. Establishment of a church; |
| கோயிற்பிள்ளை | kōyiṟ-piḷḷai, n. <>id. +. Church warden; sexton; கிறிஸ்தவக்கோயிலின் அதிகாரி. |
| கோயிற்புராணம் | kōyiṟ-purāṇam, n. <>id. + A purāṇam by Umāpati-civācāriyar dealing with Chidambaram; சிதம்பரமான்மியத்தைக்குறித்து உமாபதிசிவாசாரியர் இயற்றியபுராணம். |
| கோயிற்புறம் | kōyiṟ-puṟam, n. <>id. +. Land endowed to a temple; கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற நிலம். Nā. |
| கோயிற்பெருச்சாளி | kōyiṟ-peruccāḷi, n. <>id. +. Lit., temple-bandicoot. One who misappropriates the temple funds; [கோயிலில்வாழும் பெருச்சாளி] கோயிற்சொத்தை அபகரிப்போன். உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.). |
| கோயின்மேரை | kōyiṉ-mērai, n. <>id. +. Portion of agricultural produce set apart for temple; கோயிலுக்குக் கொடுக்கும் மாசூல் பகுதி. (W. G.) |
| கோயின்மை | kōyiṉmai, n. <>id. 1. Royal dignity, pride, as of a king; பெருமை. அடிமையென்னுமக் கோயின்மை யாலே (திவ். பெரியாழ். 5, 1, 4). 2. Arrogance, conceit; |
| கோயினான்மணிமாலை | kōyiṉāṉmaṇimālai, n. <>id. + நான்மணி +. A poem by Paṭṭiṉattaṭikaḷ in praise of Siva at Chidambaram; சிதம்பரத்துள்ள சிவபிரான்மீது பட்டினத்தடிகள் பாடிய ஒரு பிரபந்தம். |
| கோர் - த்தல் | kōr-, 11 v. tr. [M. kōr.] Corr. of கோ-. . |
| கோர்க்கலம் | kōr-k-kalam, n. <>gō +. Crockery, earthen vessel; மட்கலம். (J.) |
| கோர்க்காலி | kōrkkāli n. See கோக்காலி. . |
| கோர்ட்டார் | kōrṭṭār, n. <>E. court. Magistrate, judge; நியாயாதிபதி. |
| கோர்ட்டு | kōrṭṭu, n. <>E. Court; நியாயஸ்தலம். |
| கோர்ட்டுமௌகூப்பு | kōrṭṭu-maukūppu, n. <>id. + U. maukuz. Closing of the court; கோர்ட்டுச் சாத்துகை. (C. G.) |
| கோர்வை 1 | kōrvai, n. <>கோ-. [M. kōrva.] Corr. of கோவை. . |
| கோர்வை 2 | kōrvai, n. perh. கோலு-. A kind of metallic vessel for taking and serving rice; அன்னவெட்டியென்னும் பாத்திரம். |
| கோர்வைப்புகையிலை | kōrvai-p-pukai-yilai, n. <>கோர்வை1 +. Tobacco-leaves strung together on a line; புகையிலை அடுக்கு. (W.) |
| கோர்ஜா | kōrjā, n. <>U. kōrja. Bale of cloth containing 20 pieces; 20 உருப்படி அடங்கிய ஜவுளி மூட்டை. (C. G.) |
| கோரக்கநாதர் | kōrakka-nātar, n. prob. gō-rakṣa +. A Siddha, one of navanāta-cittar; நவநாதசித்தருள் ஒருவர். (சது.) |
| கோரக்கர் | kōrakkar, n. See கோரக்கநாதர். . |
| கோரக்கர்மூலி | kōrakkar-mūli, n. <>கோரக்கர் +. The drug ganja, as used by Kōrakkar; [கோரக்கநாதர் உபயோகித்த் மூலிகை] கஞ்சா. (மூ. அ.) |
| கோரகம் 1 | kōrakam, n. prob. gōlaka. [T. kōra.] See கோரம்1. (W.) . |
| கோரகம் 2 | kōrakam, n. <>kōraka. Bud; அரும்பு. (பிங்.) |
| கோரகை 1 | kōrakai, n. prob. gōlaka. [M. kōraka.] 1. Begging bowl of the Buddhist ascetics; பௌத்தபிட்சுக்களின் பிச்சைப்பாத்திரம் (மணி. 5, 59, அரும்.) 2. Landle; |
| கோரகை 2 | kōrakai, n. <>kōraka. See கோரகம்2. (உரி. நி.) . |
| கோரகை 3 | kōrakai, n. See கோரக்கர்மூலி. (இராசவைத். 149.) . |
| கோரகை 4 | kōrakai, n. cf. kōkila. Indian cuckoo; குயில். (பிங்.) |
| கோரங்கம் | kōraṅkam, n. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) |
| கோரங்கி | kōraṅki, n. <>kōraṅgī. Cardamom plant. See சிற்றேலம். (மலை.) |
| கோரங்கிழங்கு | kōraṅ-kiḻaṅku, n. <>கோரை +. See கோரைக்கிழங்கு. . |
| கோரசம் | kōracam, n. A kind of partridge; சிவல் என்னும் பறவைவகை. (பிங்.) |
| கோரண்டம் | kōraṇṭam, n. <>kuraṇṭka. 1. A species of conehead. See பெருங்குறிஞ்சி (பிங்.) 2. Henna. 3. Thorny nail-dye. |
| கோரணி | kōraṇi, n. prob. ghōra. 1. Mockery by gesture; mimicry; கேலிக்கூத்து. தோகையர் பாலர்கள் கோரணிகொண்டு (பட்டினத். உட்ற்கூற்றுவண்ணம், 3) 2. Grimace, distortion of the countenance, as in pain or mimicry; 3. Eqilepsy; 4. Captious complaint; |
