Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோமாளி | kōmāḷi, n. <>கோமாளம். [M. kōmāḷi.] Jester, buffoon; கோணங்கி. நிலையிலாத கோமாளி (திருப்பு. 530). |
| கோமாளிக்கூத்து | kōmāḷi-k-kūttu, n. <>கோமாளி+. Buffoonery; நகைப்புவிளைகுஞ் செயல். Loc. |
| கோமான் 1 | kōmāṉ, n. <>கோ3 [M. kōmān.] 1. King; அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர் (பெருங். உஞ்சைக். 44, 93). 2. Person of eminence, lord; 3. Spiritual preceptor; 4. Elder; |
| கோமான் 2 | kōmāṉ, n. prob. kōla + மா. Hog; பன்றி. (குடா.) |
| கோமி | kōmi, n. See கோமதி. கோமியு முறையுங் குடமூக்கிலே (தேவா. 432, 8). . |
| கோமியம் 1 | kōmiyam, n. <>gōmēdaka. Cinnamon-stone. See கோமேதகம். (சங். அக.) |
| கோமியம் 2 | kōmiyam, n. See கோமயம், 2. Colloq. . |
| கோமிலாய் | kōmilāy, n. Rude, brutish person; காட்டுவிலங்கின் தன்மையைன் (யாழ். அக.) |
| கோமுகம் | kōmukam, n. <>gō-mukha. 1. See கோமுகாசனம். . 2. See கோமுகி. ஒரு விரல் உசரத்துக் கோமுகம் ஒன்று (S. I. I. ii, 176, 6). 3. A kind of musical instrument; |
| கோமுகாசனம் | kōmukācaṉam, n. <>id. + āsana. Lit., cow-face posture. A yōgic posture which consists in crossing the ankles and placing them on the hip joints; [பசுவின் முகப்போன்ற இருக்கை] கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை. |
| கோமுகி | kō-muki, n. <>gō-mukhī. Gargoyle as in the form of cow's head, projecting from a building, pedestal of a lingam, etc.; பசு முதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும் வாய். |
| கோமுகை | kōmukai, n. <>id. See கோழகி. ஒருமுழங் கோமுகையோடும் (சைவச. பொது. 505). . |
| கோமுட்டி | kōmuṭṭi, n. See கோமட்டி. . |
| கோமுட்டிக்குட்டு | kōmuṭṭi-k-kuṭṭu, n. <>id. + குட்டு3. Trade-secrets, as of a Kōmuṭṭi; கோமூட்டிகலின் வியாபஆர ரகசியம். |
| கோமுட்டிச்சாட்சி | kōmuṭṭi-c-cāṭci, n. <>id.+. Lit., the evidence of a Kōmuṭṭi. Evidence equally favourable to the plaintiff and defendant, evidence of ambiguous value; [கோமுட்டி சொல்லுஞ் சாட்சி] வாதிபிரதிவாதிகளிருவருக்கும் ஏற்ப உரைக்கும் சாட்சியம். |
| கோமுற்றவர் | kō-muṟṟavar, n. <>கோ3+முற்று-. Kings; அரசர். கோமுற்றவர் கொள்ளுதல் (அஷ்டாதச. பக். 71). |
| கோமுறை | kō-muṟai, n. <>id. +. Just rule of a king; அரசனது நெறிதவறாத ஆட்சி. கோ முரை யன்றிப் படுபொருள் வௌவிய (சிலப். 23, 101). |
| கோமுனி | kō-muṉi, n. <>id. +. Royal sage; ராஐரிஷி. சரங்களேகொடு கோமுனி யிருக்கையோர் கூடா மாக்கினான் (கம்பரா. வேல்வி. 49). |
| கோமூத்திரம் | kō-mūttiram, n. <>gō +. Cow's urine; பசுவின் சிறுநீர். |
| கோமூத்திரிகை | kōmūttirikai, n. <>gō +. Verse of two lines composed in such a way that the 1st letter of the 1st, the 2nd of the 2nd, the 3rd of the 1st, the 4th of the 2nd, etc., when read together form the 1st line and the 1st of ஒரு செய்யுளின் முன்னிரண்டடி மேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதி அவ்விரண்டு வரியின் எழுத்துக்களையும் கோமூத்திர ரேகைபோல் மாறிமாறிப் படிக்க அச்செய்யுளாகும்படி அமைத்துப் பாடுஞ் சித்திரகவி (தண்டி. 95.) |
| கோமேதகத்தீவு | kōmētaka-t-tīvu, n. <>gō-mēdaka+. An annular continent; சத்த தீவுகளுள் ஒன்று (சி. போ. பா. பக். 209.) |
| கோமேதகம் | kōmētakam, n. <>gō-mēdaka. Sardonyx from the Himalayas and the Indus, one of nava-maṇi, q.v.; நவமணிகளுள் ஒன்று (சிலப்.14, 190, உரை.) |
| கோமேதம் 1 | kōmētam, n.<> gōmēta. See கோமேதகம். . |
| கோமேதம் 2 | kō-mētam, n.<>gō-mēdha. Cow-sacrifice; பசுவின் வபையை அவியாகக் கொடுத்துப்புரியும் யாகம் கோமேத மிராசசூயம் (உத்தரரா. திக்குலி. 117) . |
| கோய் | kōy, n. Prob. kōša. 1. Vessel for taking out toddy; கள்ழகக்கும் பாத்திரம். ஒரிற்கோயிற்றேருமால் (புறநா.300). 2. Small perfumebox; 3. The second naksatra; |
| கோயக்கண் | kōya-k-kaṇ, n. Perh. id. +. squint eye; மாறுகண். Loc. |
| கோயில் | kōyil, n. <>கோ3+இல். [T.kōyila, M. kōyil] 1. Palace, residence of a king or noble man; அரண்மனை. கோயின் மன்னனைக் குறுகினள் (சிலப்20, 47). 2. Temple, sanctuary, church, chapel; 3 Sacred town of Chidambaram; 4. Sriraṅgam; 5. Silver casket enclosing the liṅgam worn by Lingayats; 6. Parish church, parish; 7. (Mus.) A kind of time-measure; |
