Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோயில்கொள்(ளு) - தல் | kōyil-koḷ-, v. tr. <>கோயில்+. To take up abode in, inhabit; வாழுமிடமாகக் கொள்ளுதல். திருக்கடித் தானத்தைக் கோயில்கொண்டான் (திவ். திருவாய். 8, 6, 5). |
| கோயில்மாடு | kōyil-māṭu, n. <>id. +. 1. Cow or bull belonging to a temple; கோயிற்குவிடப்பட்ட மாடு. 2. Trained bull taken by wandering mendicants; See கோயிற்காளை. |
| கோயில்வாரியம் | kōyil-vāriyam n. <>id. +. Managing committee of a temple; கோயில் விசாரணைச்சபை. ஸ்ரீகோயில்வாரியம் . . . ராஐராஐ க்ரமலித்தனும் (s. I. I. iii, 188). |
| கோயிலார் | kōyilār, n. <>id. Servants of a temple; கோயில்வேலைக்காரர். (யாழ்.அக.) |
| கோயிலாழ்வார் | kōyil-āḻvār, n. <>id. +. (Vaiṣṇ.) 1. Box-shrine for private worship; ஆராதனைப்பெட்டி. 2. Inner sanctuary or sanctum sanctorum of a temple; |
| கோயிலாள் | kōyilāḷ, n. <>id. Crowned queen; பட்டத்தரசி, தானுங் கோயிலாளும் புறம் போந்துநின்று (பதிற்றுப். 8, பதி. இறுதி.). |
| கோயிலொழுகு | kōyil-oḻuku, n. <>id. +. A book dealing with the history, properties, etc., of the Shriraṅgam temple; ஸ்ரீரங்கத்துக் கோயிலின் வரலாறு கூறும் நுல். |
| கோயிற்கட்டணம் | kōyiṟ-kaṭṭaṇam, n. <>id. +. Palace-zenana; அந்தப்புரம். பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயிற்கட்டணமாய் (ஈடு, 10, 10, 9). |
| கோயிற்கட்டி | kōyiṟ-kaṭṭi, n. <>id. +. Balls of cooked rice distributed in temples; உண்டைக்கட்டி |
| கோயிற்கணக்கு | kōyiṟ-kaṇakku, n.<>id. +. The parish registry; ஊர்தோறும் கிறிஸ்தவரின் விவாகம் ஜனனம் மரணம் முதலியவற்றைப் பதியும் கோயிலிலுள்ள் கணக்குப் புத்தகம். (யாழ். அக.) |
| கோயிற்காலம் | kōyiṟ-kālam, n. <> id. +. Temple worship performed at different hours of the day; கோயில்களில் அவ்வக்காலத்துச் செய்யப்படும் பூசை. Colloq. |
| கோயிற்காளை | kōyiṟ-kāḷai, n.<> id. +. Lit., temple bull. Fat and unruly fellow; [கோயிலுக்கு விடப்பட்ட காளை] அடங்காத்தடியன். |
| கோயிற்கிராமம் | kōyiṟ-kirāmam, n. <>id. +. A village belonging to a temple; கோயிலுக்குச் சொந்தமான கிராமம். (W. G.) |
| கோயிற்குட்டி | kōyiṟ-kuṭṭi, n. <>id. +. See கோயிற்பிள்ளை. Chr. . |
| கோயிற்குறுணி | kōyiṟ-kuṟuṇi, n. <>id. +. First kuṟuṇi of a harvest given as an offering to the temple; களத்தில் முதன்முதலாகக் கோயிலுக்குக் கொடுக்கும் குறுணியலவுள்ள தானியம். Loc. |
| கோயிற்கூட்டி | kōyiṟ-kūṭṭi, n. <>id.+ கூட்டு-. Church sweeper; கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்பவள். Chr. |
| கோயிற்கூழைத்தனம் | kōyiṟ-kūḻai-t-taṉam, n. <>id. +. Hypocritical behaviour, characteristic of countriers; அரசன் சமுகத்திலுள்ளார் காட்டும் போலிவணக்கம். நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ! (திவ். இயற். திருவிருத் 99, வ்யா. 468). |
| கோயிற்கேள்வி | kōyiṟ-kēḷvi, n. <>id. +. Temple manager; கோயில் விசாரணைக்காரன். (I. M. P. N. A. 191.) |
| கோயிற்சாந்து | kōyiṟ-cāntu, n. <>id. +. Sandal-paste of superior quality, as suited to a king; அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம். கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ். திருப்பா.10, வ்யா.120). |
| கோயிற்சுற்று | kōyiṟ-cuṟṟu, n. <>id. +. Vicinity or neighbourhood of a temple; கோயிலை அடுத்துள்ள இடம். |
| கோயிற்சேரி | kōyiṟ-cēri, n. <>id.+. Part of a village belonging to a temple; கோயிலுக்குச் சொந்தமான கிராமப் பகுதி. (W. G.) |
| கோயிற்பண்ணியர்விருத்தம் | kōyiṟ-paṇ-ṇiyar-viruttam, n. <>id. +. a poem in Patiṉorān-tirumuṟai composed by Nampi-y-āṇṭārnampi; நம்பியாண்டார்நம்பியால் இயற்றப்பெற்றுப் பதினொராந்திருமுறையுள் சேர்க்கப்பெற்றுள்ள ஒரு பிரபந்தம். |
| கோயிற்பற்று | kōyiṟ-paṟṟu, n. <>id. +. 1. Lands, etc., belonging to a temple; கோயிலுக்குரிய நிலம் முதலியவை. Loc. 2. Parish district belonging to a church; |
