Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோம்பறை | kōmpaṟai, n. cf. கோம்பை1. That which is good-for-nothing; பயனற்றது (யாழ். அக.) |
| கோம்பி | kōmpi, n. <>கோம்பு-. 1. Chameleon, Chamoeles vulgaris; பச்சோந்தி. (பிங்.) 2. Bloodsucker, Lacerta cristata; |
| கோம்பு 1 - தல் | kōmpu-, 5. v. intr. perh. kup. To be angry, furious; சினத்தல். (பிங்.) |
| கோம்பு 2 | kōmpu, n. <>கோம்பு-. Anger, signs of anger; சினக்குறிப்பு. கோம்பு படைத்த மொழிசொல் பரத்தையர் (திருப்பு. 263). |
| கோம்பை 1 | kōmpai, n. cf. Mhr. kōmba. [M. kōmba.] 1. cf. Shell ofa coconut or arecanut with the husk, young palmyra fruit after the edible kernel is removed; தேங்காய் முதலியவற்றின் மேலோடு. 2. Empty-headed person; 3. Stockae in a forest; |
| கோம்பை 2 | kōmpai, n. A town in Madura district noted for dogs; ஓர் ஊர். |
| கோம்பைக்கலயம் | kōmpai-k-kalayam, n. <>கோம்பை1 +. 1. A bottomless mud-vessel; அடியற்ற மட்பாண்டம். 2. See கோம்பை, 2. Loc. |
| கோம்பைநாய் | kōmpai-nāy, n. <>கோம்பை2 +. The 'Poligar' species of large red dogs used as watch-dogs, bred in Kōmpai in Madura district; கோம்பைநகரிலுள்ளதும் காவல் புரிவதிற் சிறந்ததுமான ஒருவகைச் செந்நாய். Loc. |
| கோமகள் | kō-makaḷ, n. <>கோ3 +. 1. Queen; அரசி. எங்கோமகளை யாட்டிய வந்நாள் (சிலப். 25, 161). 2. Lady in authority, mistress; |
| கோமகன் | kō-makaṉ, n. <>id. +. 1. Prince, son of a king; அரசகுமரன். கோமகற் பெற்று (பெருங். நரவாண. 7, 36). 2. King; |
| கோமசூரிகை | kō-macūrikai, n. <>gō-masūrikā. Cow-pox Vaccinia; கால்நடைகளுக்கு வரும் அம்மைவகை. (கால். வி.) |
| கோமட்டி | kōmaṭṭi, n. <>T. kōmaṭi [M. komaṭṭi.] Telugu-speaking merchant-caste; தெலுங்கு வைசிய சாதியார். |
| கோமடந்தை | kō-maṭantai, n. <>கோ3 +. Goddess of Sovereignty; இராஐயலஷ்மி. கோமடந்தை களிகூர (பாரத. அருச்சுனன்றீர். 40). |
| கோமணம் | kōmaṇam, n. [Tu. kōmaṇa.] Man's loin-cloth. See கோவணம். Colloq. |
| கோமணாண்டி | kōmaṇāṇṭi, n. <>கோமணம்+ஆண்டி. See கோவணாண்டி. . |
| கோமதி | kōmati, n. <>Gōmatī. The river Gumti in Oudh; ஒரு நதி. ஆனகோமதி வந்தெய்து மரவம் (கம்பரா. வேள்வி. 5). |
| கோமயம் | kōmayam, n. <>gō-maya. 1. Cow-dung; சாணம். கோமயப் பூச்சுச் செய்தே (இரகு. கடிம. 79). 2. Cow's urine; |
| கோமரத்தாடி | kōmarattāṭi, n. <>கோமரம்+ஆடி. A person who is inspired by šāstā or other deities, and dance; சாஸ்தாமுதலிய தெய்வங்களின் ஆவேசத்தால் ஆடுபவன். (G. Tn. D. I, 109.) |
| கோமரம் 1 | kōmaram, n.<> M. kōmaram. Inspiration, possession by spirits; தெய்வ ஆவேசம். (G. Tn. D. I, 109.) |
| கோமரம் 2 | kōmaram, n. Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.) |
| கோமலமூலகம் | kōmala-mūlakam, n. perh. kōmala-mūlaka. Horse-radish tree. See முருங்கை. (சங். அக.) |
| கோமளம் | kōmaḷam, n. <>kōmala. 1. Softness, tenderness; மென்மை. கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68). 2. Youthfulness, juvenility; 3. Lovelliness, beauty; 4. Milch cow; 5. A kind of ruby; |
| கோமாட்டி | kōmāṭṭi, n. <>கோ3+ஆட்டி. See கோமகள், 2. கவிரிதழ்க் குறக்கோமாட்டி கணவனை (குற்றா. தல. நூற்பயன். 49). . |
| கோமாணங்கையர் | kōmāṇaṅkaiyar, n. <>கோமாள்+நங்கையர். Queens-in-chief in a king's harem; அரசன்பெருந்தேவியர். பைந்தொடிக்கோமாணங்கையர் (பெருங். உஞ்சைக். 40, 63). |
| கோமாதாக்கள் | kō-mātākkaḷ, n. <>gō +. The five 'mother cows', viz., nantai, pattirai, curapi, cucīlai, cumaṉai; நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள். கோமாதாக்களாயினரை (வாயுசங். பாசுபத. 20). |
| கோமாயு | kōmāyu, n. <>gōmāyu. Jackal; நரி. (பிங்.) |
| கோமாரி | kōmāri, n. <>gō + [T. gōmāri.] Foot-and-mouth disease of cows; பசுக்களின் பாதங்களிலும் வாயிலும் காணும் நோய்வகை. |
| கோமாள் | kōmāḷ, n. <>கோ3 +. See கோமகள், 2. கோமாட் கோடிய குறிப்பினனாகி (பெருங். மகத. 8, 59). . |
| கோமாளம் | kōmāḷam, n.cf. kumāla [M. kōmāḷam.] Jumping, romping, as of fat bullocks. See கும்மாளம். (W.) |
