Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோவணாண்டி | kōvaṇāṇṭi, n. <>கோவணம் + ஆண்டி. Lit., a beggar with only a loin-cloth for his clothing. Destitute person; [கோவணமட்டுமுடைய பிச்சைக்காரன்] கதியற்றவன். |
| கோவணி | kōvaṇi, n. prob. gō-parṇi. Common mountain ebony. See ஆத்தி. (மூ.அ.) |
| கோவத்தி | kō-vatti, n. <>gō-hatyā. See கோவதை. . |
| கோவதை | kō-vatai, n. <>gō+. Slaughter of cows, considered a sin; பசுக்கொலை. கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு (பெரியபு. மநூநீதி. 34). |
| கோவம் 1 | kōvam n. <>kōpa. Anger; கோபம். கோவந் தோன்றிடிற் றாயையு முயிருணுங் கொடியோர் (கம்பரா படைக்கா.23). |
| கோவம் 2 | kōvam, n. <>indra-gōpa. Cochineal. See தம்பலப்பூச்சி. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிற்புபாண். 71). |
| கோவம் 3 | kōvam, n. cf. karbura. Gold; பொன் (பிங்.) |
| கோவர்த்தனம் | kōvārttaṉam, n. <>Gō-vardhana. Celebrated hill in Brindaban near Muttra lifted up and held by Krṣṇa to shelter cows and cow-herds from a rain-storm sent by Indra; இந்திரன் சினந்து விடுத்த பெருமழையைத் தடுத்துக் கோக்களையும் கோவலரையும் காப்பதற்காகக் கண்ணனாற் குடையாகத் தாங்கப்பட்டதும் வடமதுரைப் பக்கத்துள்ளதுமான ஒரு மலை. (திவ். பெரியாழ். 3, 5, 1.) |
| கோவர்த்தனர் | kōvarttaṉar, n. <>id. Herdsmen; கோவைசியர். (பிங்.) |
| கோவல் | kōval, n. See கோவலுர். கோவலுர். கோவலிடைகழியே பற்றி (திவ். இயற். 1, 86). |
| கோவலகணவாய் | kōvala-kaṇavāy, n. A species of cuttlefish Octapis vulgaris; கணவாய்ச்சிப்பிமீன் வகை. (W.) |
| கோவலர் | kōvalā, n. <>gō-pāla. Men of the sylvan tract, herdsmen; முல்லைநிலமாக்கள் குருந்தங் கண்ணிக் கோவலர் (ஐங்குறு. 439). |
| கோவலன் | kōvalaṉ, n. Hero of the epic Cilappatikāram; சிலப்பதிகாரக்காப்பியத்தலைவன். |
| கோவலி | kōvali, n. perh. gō + வலி-. Tetanus; பற்கிட்டுகை. Loc. |
| கோவலூர் | kōval-ūr, n. Tirukkoyilur in S. Arcot district of historic interest; தென்னார்க்காடு ஐல்லாவிலுள்ளதும் பழைமையுடையதுமாகிய திருக்கோவலுர் முரண்மிகு கோவலூர் நூறி. (புறநா. 99). |
| கோவளம் | kōvaḷam, n. <>Mhr. kōḷam. 1. Cape, headland; கடற்குள் நீண்ட தரை முனை; 2. Town near a headland; |
| கோவளை | kōvaḷai, n. Tube-flower; நரிவாழை. (L.) |
| கோவன் | kōvaṉ, n. <>gō-pa. 1. Herdsman; இடையன். கோவ னிரைமீட்டனன் (சிவக. 455). 2. King; 3. Vašiṣtha; 4. šiva; |
| கோவா | kōvā, n. A grafted mango; ஓட்டு மாம்பழவகை. |
| கோவாங்கு | kōvāṅku, n. perh. gavāṅga. A kind of ruby; படிதம் என்னும் மாணிக்கவிசேடம். (சிலப். 14, 186, உரை.) |
| கோவாரி | kō-vāri, n. <>gō + வாரு-. Rinderpest; மாடுகளுக்கு வரும் வசூரிநோய். (M. Cm. D. [887] 247.) |
| கோவாலவண்டி | kōvāla-vaṇṭi, n. See கொல்லாப்பண்டி கொல்லாப்பண்டி. (சிலப். பக். 199இ ft.) |
| கோவி 1 | kōvi, n. <>kōpi nom. sing. of kōpin. Angry person; கோபழள்ளவ-ன்-ள். கோவியவாவன் (சைவச. ஆசாரக். 17). |
| கோவி 2 | kōvi, n.<>gōpi. Shepherdess; இடைச்சி. கோவி நாயகன் (திவ். பெரியதி, 2, 1, 4). |
| கோவிசந்தனம் | kōvi-cantaṉam, n. See கோவிசந்தானம் கோவிசந்தனத்தினைக் கோடு நெற்றியில் (சேதுபு. சேதுபல.128). |
| கோவிசு | kōvicu, n. <>E. Cabbage, Brassica oleracea capitata; முட்டிக்கோசு. (M. M. 419.) |
| கோவிட்டு | kōviṭṭu, n. <>gō-viṣṭhā. Cow-dung; பசுச்சாணம். (தைலவ. பாயி. 41.) |
| கோவித்தியர் | kōvittiyār, n. <>கோவி2. Women of the sylvan tract, shepherdesses; முல்லைநிலமகளிர். (தொல். பொ, 20, உரை.) |
| கோவிதாரம் | kōvitāramஇ n. <>kōvidāra. 1. Bottle-flower See குரா. (உரி. நி.); 2. Holy mountain ebony. |
| கோவிந்தக்கொள்ளி | kōvinta-k-koḷḷiஇ n. <>Gō-vinda +. Burning an unclaimed corpse with cries of 'Govinda'; கோவிந்தசத்தமிட்டு அநாதப்பிணத்துக்கிடுங் கொள்ளி. |
| கோவிந்தசதகம் | kōvinta-catakam, n. <>id.+ . A catakam poem (of 102 stanzas) by Nārāyaṇa-pārati, each stanza explaining a proverb and ending with an address to Gōvinda. நாராயணபாரதியார் இயற்றியதும் ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வொரு பழமொழியைக்கொண்டு 'கோவிந்தனே' யென்று முடியப்பெறுவதுமாகிய ஒரு சதகநூல். |
