Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோழம் | kōḻam, n. A mineral poison. See சங்கபாஷாணம். (யாழ்.அக.) |
| கோழம்பம் | kōḻampam, n. prob. குழம்பு-. cf. கோரம்பம். Confusion, tumult; குழப்பம். கொடிராகிற் கோழம்பமே (திவ். பெரியாழ், 3, 4, 5 ) . |
| கோழரை | kōḻ-arai, n. <>கொழு-மை + அரை Slippery tree-trunk; வழுவழுப்பான மரத்தினடி. கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப். 65). |
| கோழி | kōḻi, n. <>கொழு-. [T. kōdi, K.M. kōḷi, Tu. kōri. 1. Gallinaceous fowl; குக்குடம் குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341). 2. Uṟraiyūr, a town near Trichinopoly, once the capital of the Cholas, where a cock is said to have conquered an elephant; 3.Grass-hopper; 4. See கோழியவரை 5. A tuberous-rooted herb. 6. Water-nut, Trapa bispinosa; |
| கோழிக்கரணம் | kōḻi-k-karaṇam, n. <>கோழி +. (Astrol.) A division of time. See பத்திரை (யாழ்.அக.) |
| கோழிக்கல் | kōḻi-k-kal, n. <>id. +. A stone used in polishing iron; குறுஞ்சிலைக்கல். (W.) |
| கோழிக்காசிரைக்கீரை | kōḻi-k-kācirai-k-kīrai, n. <>id. +. Sea-blite. See உமரிக்கீரை. (M.M.) |
| கோழிக்காமம் | kōḻi-k-kāmam, n. <>id. +. See கோழிப்போகம். கோழிப்போகம் |
| கோழிக்காரம் | kōḻi-k-kāram, n. <>id.+. 1. Medicine in which fowl-dung is used; கோழிமலங் கூட்டிச்செய்த மருந்துவகை. 2. Medicinal broth of boiled fowl; 3. Fowl-dung generally used in manuring soil for the ganja plant; |
| கோழிக்கால் 1 | kōḻi-k-kāl, n. perh. கோளி +. Wild pipal. See கொடியரசு. (மலை.) |
| கோழிக்கால் 2 | kōḻi-k-kāl, n. <>கோழி +. Cross-mark shaped like X, as resembling a fowl's foot; கோழிக்கல்போன்ற அடையாளக்குறி வகை. Loc. |
| கோழிக்காற்புல் | kōḻi-k-kāṟ-pul, n. <>id. +. Deccan grass, Panicum ramosum; புல்வகை . (W.) |
| கோழிக்கீரை | kōḻi-k-kīrai, n.<> id.+ [T. gōḷikūra.] Common purslane, Portulaca oleracea; பருப்புக்கீரை (பதார்த்த.604.) |
| கோழிக்குடாப்பு | kōḻi-k-kuṭāppu, n.<>id. +. See கோழிக்கூடு. . |
| கோழிக்குடி | kōḻi-k-kuṭi, n. perh. id. Indian mast-tree. See acOku. அசோகு (L.) |
| கோழிக்குரல் | kōḻi-k-kural, n. id. +. See கோழிகூவுநேரம். கோழிகூவுநேரம். (யாழ்.அக.) |
| கோழிக்கூடு | kōḻi-k-kūṭu, n. <>id. +. Hen-coop, fowl-house; கோழியை அடைத்துவைக்கும் இடம். Colloq. |
| கோழிக்கொடி | kōḻi-k-koṭi n.<> id. +. See கோழியவரி. கோழியவரி. (மலை.) |
| கோழிக்கொடியோன் | kōḻi-k-koṭiyōṉ, n. ஈid. +. 1. Lit., one having a cock on his banner. முருகக்கடவுள். கோழிக் கொடியோன்றன்றாதை போலும் (தேவா. 253, 2). 2. Aiyaṉār; |
| கோழிக்கொண்டை | kōḻi-k-koṇṭai, n. <>id. +. Cockscomb, ornamental shrub Celosia cristata; சாவற்சுட்டுப்பண்ணை. (மலை.) |
| கோழிகிண்டு - தல் | kōḻi-kiṇṭu-, v. intr. To scrawl, scribble; உருத்தெரியாதபடி எழுதுதல். Colloq. |
| கோழிகூவல் | kōḻi-kūval, n. <>id. +. See கோழிகூவுநேரம். கோழிகூவுநேரம். (யாழ்.அக.) |
| கோழிகூவுநேரம் | kōḻi-kūvu-nēram, n. <>id. +. Daybreak, as the time of cock-crowing; [கோழி கூவும் சமயம் விடியற்காலம். Colloq. |
| கோழிச்சூடன் | kōḻi-c-cūṭaṉ, n. <>id. +. cūdā. See கோழிக்கொண்டை. கோழிக்கொண்டை. (J.) |
| கோழிச்சேவல் | kōḻi-c-cēval, n. <>id. +. Cock ; கோழிச்சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப்.14, 10). |
| கோழித்தலைக்கந்தகம் | kōḻi-t-talai-k-kantakam, n. perh. id. + திலை+. Red sulphur, a prepared arsenic; வைப்புப்பாஷாண வகை. (W.) |
| கோழிநூல் | kōḻi-nūl, n. <>id. +. Treatise on cock-fighting; கோழிகளின் போர்த் திறங்களைக் கூறும் நுல். (பு.வெ.12, வென்றிப். 6 உரை.) |
| கோழிநெஞ்சு | kōḻi-necu, n. <>id. + cf. கோழைநெஞ்சு. Chicken-heart; அஞ்சிநடுங்கும் மனம். (யாழ்.அக.) |
| கோழிப்பசளை | kōḻi-p-pacaḷai, n.<>id. +. Sea-blite . See உமரிக்கீரை (L.) |
| கோழிப்பறவை | kōḻi-p-paṟavai, n. <>id. +. Short distance, distance of a fowl's flight; கோழிபறாக்குந் தூரவளவு. (J.) |
