Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோஷ்பாரா | kōṣpārā n. <>U. gōṣwara. Abstract of account; கணக்குச் சுருக்கம். |
| கோஷ்வாரா | kōṣvārā n. <>d. See கோஷ்பாரா. கோஷ்பாரா. Loc. |
| கோஷம் | kōṣam n. <>ghōṣa. 1. Noise, roar, thunder; பேரொலி. 2. Herdsmen's quarters; |
| கோஷா | kōṣā n. <>U. gōṣa. Zenana lady, purdahnashin; அன்னிய புருஷர் காணாதபடி திரையிட்டு வாழும் பெண்கள். Colloq. |
| கோஷி - த்தல் | kōṣi -, 11. v. intr. <>ghōṣa. To sound, roar; ஒலித்தல். டமாரங்கள் கோஷிப்ப (பணவிடு. 71). |
| கோஸ்தா | kōstā n. <>E. coast. Sea-coast; கடற்கரை. (C.G.) |
| கௌ 1 | kau . The compound of க் and ஔ. . |
| கௌ 2 | kau n. cf. Mhr. gallā. Horse-gram; கொள்ளு. (மலை.) |
| கௌசல்யம் | kaucalyam n. <>kaušalya. Ability; திறமை. சிற்பகௌசல்யத்துடனே குண்ட மண்டபவேதிகளைச் சமைத்து (சி.சி.8, 3, சிவாக்.) . |
| கௌசலம் | kaucalam n. 1. See கௌசல்யம். . 2. Art, artfulness; |
| கௌசலை | kaucalai n. <>Kausalayā. Rama's mother; இராமபிரான் தாய. மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே (திவ். பெருமாள். 8, 1). |
| கௌசனம் | kaucaṉam n. cf. ku-vasana. See கௌபீனம். Loc. . |
| கௌசனை | kaucaṉai n. <>koša. 1. [T. gausena.] Cover, envelope; உறை; 2. Cushion or pad for a rider on a horse or elephant; |
| கௌசாம்பி | kaucāmpi n. <>Kaušambi An ancient city on the banks of the Ganges in the lower part of the Doab; கங்கைக் கரையிலுள்ள ஒரு பழைய நகரம். |
| கௌசிகம் 1 | kaucikam n. <>Kaušika. 1. Owl; கூகை. (பிங்.) 2. Silk cloth; 3. A primary melody-type; |
| கௌசிகம் 2 | kaucikam n. Lamp-stand. விளக்குத்தண்டு. (பிங்.) |
| கௌசிகன் | kaucikaṉ n. <>Kaušika. Lit., descendant of Kušika. [குசிக வமிசத்தான்] 1. Višvāmitra; விசுவாமித்திரன் கௌசிகன் சொல்லுவான் (கம்பரா மிதிலை. 42). 2. Indra; |
| கௌசுகம் | kaucukam n. <>kaušika. Tripterocarp dammar. See குங்கிலியம். (மலை.) |
| கௌஞ்சம் | kaucam n. <>kraunca. See கிரவுஞ்சம். (சூடா.) . |
| கௌடநடை | kauṭ-anaṭai n. <>gauda + . See கௌடநெறி. (W.) . |
| கௌடநெறி | kauṭa-neṟi n. <>id. +. (Rhet.) The kauṭam style of poetry characterised mainly by verbosity, dist. fr. vaitaruppa-neṟi; செறிவு முதலிய வைதருப்பநெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுணெறி. (தண்டி.12, உரை.) |
| கௌடம் 1 | kauṭam n. <>Gauda. 1. The district of Gaur, central part of Bengal extending from Vanga to the borders of Orissa; வங்காளமத்தியத்தில் உள்ள ஒரு தேசம். 2. (Rhet.) See கௌடநெறி. (தண்டி. 14.) |
| கௌடம் 2 | kauṭam n. A medicinal creeper; முலிகைவகை. (W.) |
| கௌடி | kauṭi n. prob. gaudi. A musical mode. See கவுடி2. (பிங்.) |
| கௌடிலம் | kauṭilam n. <>kauṭiya. Bend, curve, crookedness; வளைவு. (மணி. அரும்.) |
| கௌடிலியர் | kauṭiliyā n. <>Kauṭilya. Cānakya, the author of a treatise on Polity in Sanskrit; வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றிய சாணக்கியன். |
| கௌண்டன் | kauṇṭaṉ n. A caste title. See கவுண்டன், 1. |
| கௌணப்பொருள் | kauṇa-pporuḷ n. <>gauṇa +. Secondary meaning or sense of a word, metaphorical sense, opp. to mukkiya-p-poruḷ; இலக்கணைவகையாற் கொள்ளும் பொருள். (சி.சி. பாயி. 2, ஞானப்.) |
| கௌணம் | kauṇam n. <>gauṇa. That which is subordinate or secondary; முக்கிய மல்லாதது. |
| கௌணாவதாரம் | kauṇāvatāram n.<>id. + ava-tāra. Secondary or partial incarnation in which God's spirit enters and works through a human being; ஒரு நிமித்தம்பற்றித் தன்சக்தியை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வ அவதாரம் . |
| கௌணியன் | kauṇiyaṉ n. <>Kauṇdinya . One born in Kauṇdinya gōtra. See கவுணியன். |
| கௌத்துவக்காரன் | kauttuva-k-kāraṉ n. <>கௌத்துவம்3+. Deceitful person; வஞ்சகன். |
