Word |
English & Tamil Meaning |
|---|---|
| சஞ்சீவகரணி | cacīva-karaṇi, n. <>sajīva-karaṇī. 1. Medicine that restores suspended animation; மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து. (மூ. அ.) 2. Tamarind tree; |
| சஞ்சீவன் | cacīvaṉ, n. Mango tree; மாமரம். (மலை.) |
| சஞ்சீவனம் | cacivaṉam, n. <>sa-jīvana. Restoring to life; resuscitating; உயிர்ப்பிக்கை. (யாழ். அக.) |
| சஞ்சீவனி | cacīvaṉi, n. <>sa-jīvanī. See சஞ்சீவி. சஞ்சீவனி கண்ட செம்பொனிமயாசலத்தில் (திருவாவடு. கோ. 113). |
| சஞ்சீவனை | cacīvaṉai, n. perh. sa-jīvanā. 1. See சஞ்சீவி. . 2. Earth-worm; |
| சஞ்சீவி | cacīvi, n. <>sa-jīvī nom. sing. of sa-jīvin. 1. Medicine or herb for reviving one from swoon or death; உயிர்ப்பிக்கும் மருந்து அல்லது மூலிகை. மூர்ச்சை கடித்கல வலியவரு ஞான சஞ்சீவியே (தாயு. சின்மயானந்த. 3). 2. Gulancha; |
| சஞ்சீவிபருவதம் | ca-cīvi-paruvatam, n. <>சஞ்சீவி +. A mountain mentioned in Ramayana, as producing herbs which restore the dead to life; இறந்தவரைப் பிழைப்பிக்கும் மூலிகையுடைதாக இராமாயாநத்துக் கூறப்பட்ட ஒரு மலை. |
| சஞ்சீவிமூலிகை | cacīvi-mūlikai, n. <>id. +. Revivifying roots or herbs; உயிர்தரும் ஒருவகை மருந்துப் பச்சிலை. (w.) |
| சஞ்சீவினி | cacīviṉi, n. See சஞ்சீவி. சோருமுயிர் புரக்குஞ் சந்சீவினிபோல் (திருவாவடு. கோ. 66). |
| சஞ்சு 1 | cacu, n. <>cacu. 1. Bird's beak; பறவை மூக்கு. கனியிற் றீண்டுபு சஞ்சடர்த்திட (இரகு. குறைகூ. 31). 2. Castor plant. See ஆமணக்கு. (மலை.) |
| சஞ்சு 2 | cacu, n. [K. cacu.] Manners, customs, habits, as peculiar to individuals or castes; குலதருமம். (w.) |
| சஞ்சு 3 | cacu, n. cf. sam-yaj. Likeness, form, shape; சாயல். (J.) |
| சஞ்சுகை | cacukai, n. cf. sam-yuj. See சஞ்சு3. . |
| சஞ்சுபம் | cacupam, n. 1. Paraphernalia of a king; அரசர்க்குரிய விருதுகள். சஞ்சுபவர்க்கந்தளதளென (பணவிடு. 75). 2. Appurtenances. See முஸ்திப்பு. (w.) |
| சஞ்சுவம் | cacuvam, n. See சஞ்சுபம். (w.) . |
| சஞ்சேபம் | cacēpum, n. <>saṅ-kṣēpa. Epitome, abstract; சுருக்கம். |
| சட்குணம் | caṭ-kuṇam, n. <>ṣad-guṇa. The six attributes of the supreme Being. See ஷட்குணம். . |
| சட்கோணம் | caṭ-kōṇam, n. <>ṣaṭ-kōṇa. Hexagon. See ஷட்கோணம். சட்கோண நெடுந்தேர் மிசை (பாரத. பதினாறாம். 65). |
| சட்சட்டெனல் | caṭ-caṭ-ṭ-eṉal, n. Onom. expr. signifying haste or hurry; விரைவுக்குறிப்பு. |
| சட்சம் | caṭcam, n. <>ṣad-ja. (Mus.) A note of the gamut. See ஷட்ஜம். (சிலப். 3, 26, உரை.) . |
| சட்சமம் | caṭcamam, n. See சட்சம். Colloq. . |
| சட்சமயம் | caṭ-casmayam, n. <>ṣaṭ-samaya. The six Vēdic religious systems; அறுசமயம். சட்சமவேத (திருப்பு. 132). |
| சட்சு | caṭcu, n. <>cakṣuh nom. sing. of cakṣuṣ. Eye; கண். (சி. சி. 2, 61. மற்றைஞா.) |
| சட்சுதீட்சை | caṭcu-tīṭcai, n. <>சட்சு+. (šaiva.) Gracious look, as a mode of initiation. See நயனதீட்சை. . |
| சட்சுருதிதைவதம் | caṭ-curuti-taivatam, n. <>ṣaṭ-šruti +. (Mus.) Lowest variety of the sixth note of the gamut, one of cōṭacacuram, q.v.; சோடாசசுரங்களுள் ஒன்று. |
| சட்சுருதிரிஷபம் | caṭ-curuti-riṣapam, n. <>id. +. (Mus.) Middle variety of the second note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடாசசுரங்களுள் ஒன்று. |
| சட்ட | caṭṭa, adv. 1. Properly, rightly; செல்விதாக. சட்ட வினியுளது சத்தேகாண் (சி. போ. 9, 2.) 2. Entirely; 3. Speedily; |
| சட்டக்கட்டில் | caṭṭa-k-kaṭṭil, n. <>சட்டம் +. [M. caṭṭakkaṭṭil,] Cot with a detachable frame; பிரித்துக் கழற்றும்படி அமைந்த கட்டில். Loc. |
| சட்டக்கதவு | caṭṭa-k-katavu, n. <>id. +. Panelled door; கனத்த சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப்பலகைகளால் அமைக்கப்பட்ட கதவு. Loc. |
| சட்டக்கல்லி | caṭṭakkalli, n. [T. saṣṭakalli.] Clever but vain talk; சமத்காரப்பேச்சு. (w.) |
