Word |
English & Tamil Meaning |
|---|---|
| சட்டைபண்ணு - தல் | caṭṭai-paṇṇu-, v. tr. <>சட்டை2+. To care for, regard; இலட்சியஞ் செய்தல். |
| சட்டைமுனி | caṭṭai-muṉi, n. perh. சட்டை1+. Author of some medical treatises in Tamil; தமிழில் வைத்தியநூல் சிலவற்றை இயற்றிய ஒரு சித்தர். |
| சட்டோலை | caṭṭōlai, n. <>சட்டம்+ ஓலை. Ola or palm-leaf fit for writing; சட்டம் எழுதுதற்குரிய ஓலை. (யாழ்.அக.) |
| சட்பதம் | caṭ-patam, n. <>ṣaṭ-pada. Beetle, as six-legged. See அறுகால்1. சட்பதங் குடைந்தெழு தாமம் (செவ்வந்தி. பு. நினைத்தது. 4) . |
| சட்பம் | caṭpam, n. <>šaṣpa. 1. Tender grass; இளம்புல். (திவா.) 2. Bermuda grass; 3. See சஷ்பம். |
| சட்பாவம் | caṭ-pāvam, n. <>ṣad-bhāva. The six states of the physical body, viz., iruttal, tōṉṟutal, uru-t-tirital, vaḷartal, curuṅkutal, aḻital; சரீரத்திற்கு உண்டாகும் இருத்தல் தோன்றுதல் உருத்திரிதல் வளர்தல் அருங்குதல் என்ற ஆறுநிலைகள். சட்பாவம் ... இயைந்திடாப் புற்கலன்றன்னை (காசிக. யோக.13). |
| சட்பிதாபுத்திரிகம் | caṭ-pitā-puttirikam, n.<>ṣaṭ-pitā-putraka. (Mus.) A variety of time-measure, one of paca-tāḷam, q.v.; பஞ்சதாளங்களுள் ஒன்று. (பரத. தாள. 13.) |
| சட்னி | caṭṉi, n. <>U.caṭnī. Chutney, a kind of strong relish; துவையல்வகை. |
| சடக்கடை | caṭa-k-kaṭai, n. <>jada + கடை = nava-dvāra. Nine; ஒன்பது. (தைலவ. தைல. 114.) |
| சடக்கரம் | caṭ-akkaram, n. <>ṣad-akṣara. The mantra of six letters, sacred to God Kumāra; குமரக்கடவுளுக்குரிய ஆறெழுத்துக்களாலாகிய மந்திரம். (இலக்.அக.) |
| சடக்கன் | caṭakkaṉ, n. Sea-fish (a) pearly-white, attaining 18 in. in length, Heniochus macrolepidotus: கடல்மீன்வகைகள். (b) greyish, attaining 20 in. in length, Platax teira: (c) brownish, Platax vespertilio; |
| சடக்கு 1 | caṭakku, n. cf. srāk. 1. Speed, rapidity; வேகம். சாரிகை வந்த சடக்கு (ஈடு 7, 4, 7). 2. Arrogance; |
| சடக்கு 2 | caṭakku, n. cf. jada. Body; உடல். மெய்போலிருந்து பொய்யாஞ் சடக்கை. (தாயு. சச்சிதானந்த. 2) |
| சடக்குச்சடக்கெனல் | caṭakku-c-caṭakke-ṉal, n. Onom. expr. of clacking, as when walking with wooden sandals ஓர் ஒலிக்குறிப்பு. |
| சடக்கெனல் | caṭakkeṉal, n. <>சடக்கு1. [K. caṭakkane.] Onom. expr. signifying haste, rush; விரைவுக்குறிப்பு. சடக்கென. . . கன்னறின்னென வேவினன் (திருவாலவா.14, 4). |
| சடக்கோதன் | caṭakkōtaṉ, n. cf. ṣaṭgrantha. Sweet flag. See வசம்பு. (மலை.) . |
| சடகம் 1 | caṭakam, n. <>caṭaka. 1. Sparrow; ஊர்க்குருவி. (சூடா.) 2. Kingcrow; |
| சடகம் 2 | caṭakam, n. <>casaka. Cup, drinking-vessel; வட்டில். (சூடா) |
| சடகோபதாசர் | caṭakōpa-tācar, n. <>šaṭhakōpa-dāsa. Author of the Ari-camaya-tīpam, 17th c.; அரிசமயதீபம் என்னும் நூலை இயற்றியவரும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்தவருமாகிய ஆசிரியர். |
| சடகோபம் | caṭakōpam, n. <>šaṭha-kōpa. Small metal head-cover on which Viṣṇu's sandals or feet are engraved, and which is placed over the head of worshippers in Viṣṇu temples; விஷ்ணுவாலயங்களில் தரிசிப்பவர்களது முடியில் வைத்து அனுக்கிரகிப்பதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு சுவாமியின் முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடிநிலை. சடகோபஞ் சித்திக்க (அழகர்கலம். காப்பு. 1). |
| சடகோபரந்தாதி | caṭakōpar-antāti, n. <>id.+. Poem on Nammāḻvār attributed to Kampaṉ; நம்மாழ்வார்மீது கம்பன் இயற்றியதாகக் கூறப்படும் ஓர் அந்தாதி நூல். |
| சடகோபன் | caṭakōpaṉ, n. <>šaṭha-kōpa. Nammāḻvār , a Vaiṣṇava saint, as one who subdued the evil humour caṭam; [சடமென்னும் வாயுவை வென்றவன்] நம்மாழ்வார். குருகூர்ச்சடகோபன் (திவ்.திருவாய். 1, 1, 1). |
| சடங்கப்படு - தல் | caṭaṅka-p-paṭu-, v. intr. <>சடங்கம்2+. (யாழ். அக.) 1. To be packed into a bundle; மூட்டையாகக் கட்டப்படுதல். 2. To be engaged in a work or duty; |
| சடங்கப்பூட்டு | caṭaṅka-p-pūṭṭu, n. prob. id.+. See சடங்கு2. (யாழ்.அக) . |
| சடங்கம் 1 | caṭaṅkam, n. <>ṣad-aṅga. 1. The six Vēdāṅgas. See வேதாங்கம். விளங்கிய சடங்கமும் (உத்தரரா. அனுமப்.46). . 2. Ceremony; |
| சடங்கம் 2 | caṭaṅkam, n. prob. saṅ-kaṭa. 1. Knapsack; பயணமூட்டை. சடங்கத்திலே போட்டுக்கட்டு. (W.) 2. Difficulty, straits, entanglement; 3. Work, duty; 4. A measure of weight = 16 tūkku; |
