Word |
English & Tamil Meaning |
---|---|
பாடி - த்தல் | pāṭi 11 v. tr. & intr. <>bhāṣ. 1. To speak; பேசுதல். காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா. 38, 67). 2. To pronounce, utter, as mantra; |
பாடிக்கதை | pāṭi-k-katai n. <>பாடி+. Idle talk; வீண்பேச்சு. (J.) |
பாடிக்காவல் | pāṭi-k-kāval n. <>id.+. See பாடிகாவல். (I. M. P. Tn. 104). . |
பாடிக்கொடு - த்தல் | pāṭi-k-koṭu- v. tr. <>பாடு-+. 1. To compose a poem and give it to another; பிறனுக்காகக் கவி செய்து தருதல். (W.) 2. To compose a poem; |
பாடிகாப்பார் | pāṭi-kāppār n. <>பாடி+. Village watchmen; those responsible for the safety of property in village; ஊர்க்காவலாளர் ஒன்று கெட்டவாறே பாடிகாப்பாரைப் பிடிக்குமா போலே (ஈடு, 10, 1, 4). |
பாடிகாவல் | pāṭi-kāval n. <>id.+. 1. System of watch in a village; ஊர்க்காவல். (Insc.) 2. Village watchman; 3. Contribution for village watching; 4. Punishment enforced by a tribunal; 5. Safe custody or detention; |
பாடிசொல்(லு) - தல் | pāṭ-col- v. tr. <>பாடி+. To expose secrets; உளவை வெளிப்படுத்துதல். (W.) |
பாடிதம் | pāṭitam n. <>bhāṣita. Speech, anything pronounced; உச்சரிக்கப்படுவது. பாடித வசன மென்றா (சிவதரு. சிவஞானயோ. 81). |
பாடிப்பேச்சு | pāṭi-p-pēccu n. <>பாடி+. See பாடிக்கதை. Nā. . |
பாடிபரதேசி | pāṭi-paratēci n. <>பாடி+. (W.) 1. Wandering ballad-singer; பாடிக் கொண்டு சஞ்சரிப்போன். 2. Wandering beggar; |
பாடிமாற்றம் | pāṭi-māṟṟam n. <>பாடி+. Colloquialisms, local idioms; வழக்குச்சொற்கள் (தொல். பொ. 553, உரை.) |
பாடிமிழ் - தல் | pāṭimiḻ- v. intr. <>பாடு+. To roar, make a loud noise; ஒலித்தல். பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் (புறநா. 49). |
பாடியகாரர் | pāṭiya-kārar n. <>bhāsyakāra. 1. Author of an elaborate commentary; பேருரைகாரர். 2. Patajali, the commentator on he Grammar of Pāṇiṉi; 3. See பாஷ்யகாரர். |
பாடியம் | pāṭiyam n. <>bhāṣya. An elaborate commentary on Sūtras; பேருரை. (W.) |
பாடியோட்டம் | pāṭi-y-ōṭṭam n. <>பாடி+. Game of prisones, bars; கிராமவிளையாட்டு வகை. (J.) |
பாடியோடு - தல் | pāṭi-y-ōṭu- v. intr. <>பாடு-+. To sing running, in the game of pāṭi-y-ōṭṭam; பாடியோட்டத்திற் பாடிக்கொண்டு ஓடுதல். (W.) |
பாடிரம் | pāṭiram n. <>pāṭīra. See பாடீரம். (W.) . |
பாடிவீடு | pāṭi-vīṭu n. <>பாடி+. Military camp, war-camp; பாசறை. பாடிவீட்டினைவலஞ் செய்கென்றான் (கம்பரா. விபீடண.151). |
பாடிவீரர் | pāṭi-vīrar n. <>id.+. Troops; படைவீரர். (நிகண்டு.) |
பாடினி | pāṭiṉi n. perh. fem. of pāṭhīna. Songstress, woman of the Pāṇar caste; பாண்குல மகளிர் வயவேந்தன் மறம்பாடிய பாடினி யும்மே (புறநா.11). |
பாடீநம் | pāṭīnam n. <>pāṭhīna. (நாநார்த்த.) 1. Tripterocarp dammer tree; See குங்குலியம். 2. Scabbard fish; |
பாடீரம் | pāṭīram n. <>pāṭīra. 1. Sanal wood; சந்தனம். (தைலவ. தைல.) 2. Cloud; 3. Rheumatism; 4. Granular seeds of the bamboo; 5. A root; 6. Zinc; 7. Field; |
பாடு 1 - தல் | pāṭu- 5 v. tr. [K. hādu.] 1. To sing; to chant; பண்ணிசைத்தல். மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11). 2. To warble as birds; to hum, as bees or bettles; 3. To make verses, compose poems; 4. To recite verses from a book; 5. To speak endearingly; 6. To praise; 7. To declare, proclaim; 8. To abuse; 9. To sing in the game of pāti-y-ōṭṭam; |